Friday, 9 August 2013

நாம் ஏன் ஒதுக்கப்பட்டோம். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே சிந்திப்பீர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1946ல் தொடங்கப்பட்டது. தமிழகத்தை முதலில் ஆட்சி செய்த காலத்திலேயே இயக்கம் நடத்திய போராட்டத்தில் காங்கரஸ் சார்பு ஆசிரியரும் போராட்ட களம் புகுந்தனர். தி.மு.க. ஆட்சியிலும் பேரறிஞர் அண்ணா கொள்கையில் பற்று கொண்ட ஆசிரியர்கள் முன்னின்று போராட்ட களம் கண்டு செஞ்சிறை செல்ல தயங்கவில்லை தமிழகத்தை ஆண்ட ஓமந்துராரில் இருந்து தற்போது வரை அத்துனை ஆட்சியிலும் போராடிய வரலாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு மட்டுமே உண்டு அப்போது நடைபெற்ற போராட்டம் எல்லாம் வெற்றி நமதே. ஆனால் இன்று பலமிழந்தது போல் ஓர் தோற்றத்தை அரசியல் கட்சிகள் தான் எற்படுத்தி உள்ளன. அரசியர் கட்சிகள் விரித்த வலை………………… அவை எல்லாம் ஆசிரியர்களின் ஒற்றுமை யார் ஆட்சிக்கு வந்தாலும் அந்த ஆட்சியை கட்டுப்படுத்தும் சக்தியாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்று இருந்து விடக்கூடாது என எண்ணிவலை விரித்தன . முதலில் மாட்டிய மீன். ஏன் மாட்டியது ஆசிரியர் மேலவைத் தேர்த்ல் 1971 தஞ்சை-திருச்சி-புதுகோட்டை அடங்கிய பகுதியின் மேலவை உறுப்பினருக்கு திரு மீனாட்சி சுந்தரம் இயக்க சார்பாக நிற்க இயக்கம் அனுமதி அளித்தது ஆனால் அவர் மீது சொல்லப்பட்ட புகார்கள் அடிப்படையில் நடந்த விசாரனையில் அது உண்மை என அறியப்பட்டதால் . இயக்க ஆதரவு வாபஸ் பெறப்பட்டது அத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இதன் விளைவு அரசியல்வாதிகளால் இவர் கண்காணிக்கப்பட்டார் விளைவு 1972 கல்வி எழுச்சி நாள் மாநில அமைப்பால் அறிவிக்கப்பட்டது 1. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு கோரி இயக்கம் போராடி வந்தது. டாக்டர் பால் கமிசன் கமிட்டியின் அறிக்கை பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன. 2. 150க்கு மேற்பட்ட ஒன்றியங்களில் முதல் தேதி ஊதியம் வழங்கப்படவில்லை பல ஒன்றியங்களில் கல்வி நிதிகள் முறையாக நிர்வகிக்க படாததால் ஆசிரியர்கள் சலுகைகள் கிடைத்தபாடில்லை. 3. மாறுதல் என்ற பெயரால் அரசியல் வாதிகளால் ஆசிரியர்கள் பந்தாடப்பட்டனர் 4. ஆசிரியர்கள் குடும்பக்கட்டுப்பாடு போன்ற இதரப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இது போன்ற கோரிகைகள் மீது 1972 சனவரியில் கல்வி எழுச்சி நாள் ஆசிரியர்கள் கல்விச்சட்டங்கள் எரித்தல் -மறியல் செய்தல் போன்ற நடவடிகையில் ஈடுபட்டனர் இயக்க முடிவின் படி கல்வி அமைச்சர் வீட்டு முன் 19 பேர் மறியல் செய்ய சென்ற போது கைது செய்யப்பட்டனர். மாநில தலைவர மீனாட்சி சுந்தரம் போராட்டத்தில் ஈடுபடவில்லை சிறைக்கும் செல்லவில்லை அரசுக்கு ஆதரவாக முதல் மீனாக மாட்டினார் முதல் மீனைகொண்டு மற்றவர்களை வளைப்பது எளிது அதலால் தி.மு.க அரசு அமைச்சர்கள் முதல்வர்கள் ஆகியோரை கொண்டு மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றே ஆசிரியர்களுக்கு முதல் அடி விழ அரம்பித்துவிட்டது. ஆம் இவர்கள் அக்கட்சி ஆட்சியில் போரட வேண்டாம் என அறிக்கக்விட்டவர்கள்தான் . *முத்துசாமி பணத்துக்காகவும் பதவிக்காகவும் ஓடியவர் . இங்கே இருந்தால் அடுத்தது பதவி கிடைக்காது என்ற நிலையில் மாஸ்டர் மணிவிழ◌ாவின் போது மாஸ்டருக்கு அளித்த நன்கொடையை மாஸ்டர் இயக்க கட்டிடம் கட்ட 80000 கொடுத்ததையும் இயக்க தளவாடச்சாமன்களையும் எடுத்துக்கொண்டு ஓடியவர். தற்போது நிரந்தர பதவியில் …………உள்ளார். ஓய்வு பெற்றாலும் விட்டுககொடுக்க மனம் இல்லை . 1984 மாநில தேர்தலில் பொதுஉடமை கொள்ளையில் மட்டுமே ஈடுபாடு கொண்ட அரசியல் வாதிகளால் துண்டப்பட்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை கைபற்ற நினைத்து செயல் பட்டவர்கள் .மாநில பதவி எட்டா கணியாகி விட்டதால்.டிசம்பர் 1984 பேரணி உண்ணாவிரதத்தில் தேர்தலில் தோற்ற ந.வீரையன் அப்துல் மஜித் ஆகியோர் த◌ாங்களே மாநில தலைவர் பொதுச்செயலர் என அறிவித்துகென்டனர். இவர்கள் மீண்டும் பிளவு பட்டது தனி வரலாறு . இவர்கள் ஆங்காங்கே உள்ள சிறு குழுக்களை வைத்துகொண்டு மாநில அமைப்புஎன்று கூறிகொள்வதார் கேவலப்பட்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நிற்கிறோம் என்றும். எந்த அரசியலுக்கும் அடிபணியாது எந்த அரசியல் கட்சியின் பின் நிர்காது எதிர்கட்சிகளின் ஆலோசனைகளுக்கு செவிசாய்காது ஆசிரியர் நலனே தன் நலன் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இன்றும் என்றும் செயல்படும்

No comments:

Post a Comment