Wednesday, 14 August 2013
கடலில் அலைகள் ஓய்வதில்லை
புதுப்புது அலைகள் வந்து போகும்.
ஒரு அலை வந்து சென்றது என்றால்
அடுத்த அலை வராமல் இருக்காது
கடலுக்கு அலைகள் சுமையாக
இருப்பதில்லை இருந்ததில்லை
அது போலத்தான் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி இருக்கும் வரை
ஆசிரியர் வர்கம் இருக்கும் வரை
கோரிக்கைகளும் போராட்டங்களும்
இருக்கத்தான் செய்யும்…..
அதை வென்றெடுக்க அனைவரும்
போராடுவோம் வெற்றி பெறுவோம்
பெண்கள் சாதனையாளர்கள்
ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும்
வெற்றி பெறுபவர்கள்
போராட்டத்திலும அவர்கள் முன் நிற்கிறார்கள்
ஆனால் கொண்ட ஆனும் பெற்ற பிள்ளையும்
தடுக்கிறார்கள் ……………..
இதை கண்டுதான் ஆசிரியர் பணியில்
79 விழுகாடு பெண்கள் தான்
என்ற நிலையை உருவாக்கியது அரசாங்கம்
இதை தாண்டி எங்கள் ஒன்றியத்தில்
பெண்ஆசிரியைகள் வீறு கொண்டு போராட்ட
களத்தில் குதிக்கிறார்கள் . எல்லா இடத்திலும்
இப்படியானால் …….
நாம் ஊதியகுறைபாடு நீக்கப்படும்
Friday, 9 August 2013
நாம் ஏன் ஒதுக்கப்பட்டோம்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே சிந்திப்பீர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1946ல் தொடங்கப்பட்டது.
தமிழகத்தை முதலில் ஆட்சி செய்த காலத்திலேயே இயக்கம் நடத்திய போராட்டத்தில்
காங்கரஸ் சார்பு ஆசிரியரும் போராட்ட களம் புகுந்தனர்.
தி.மு.க. ஆட்சியிலும் பேரறிஞர் அண்ணா கொள்கையில்
பற்று கொண்ட ஆசிரியர்கள் முன்னின்று போராட்ட களம் கண்டு செஞ்சிறை செல்ல தயங்கவில்லை
தமிழகத்தை ஆண்ட ஓமந்துராரில் இருந்து தற்போது வரை அத்துனை ஆட்சியிலும்
போராடிய வரலாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு மட்டுமே உண்டு
அப்போது நடைபெற்ற போராட்டம் எல்லாம் வெற்றி நமதே.
ஆனால் இன்று பலமிழந்தது போல் ஓர் தோற்றத்தை
அரசியல் கட்சிகள் தான் எற்படுத்தி உள்ளன.
அரசியர் கட்சிகள் விரித்த வலை…………………
அவை எல்லாம் ஆசிரியர்களின் ஒற்றுமை யார் ஆட்சிக்கு வந்தாலும்
அந்த ஆட்சியை கட்டுப்படுத்தும் சக்தியாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
என்று இருந்து விடக்கூடாது என எண்ணிவலை விரித்தன .
முதலில் மாட்டிய மீன். ஏன் மாட்டியது
ஆசிரியர் மேலவைத் தேர்த்ல் 1971
தஞ்சை-திருச்சி-புதுகோட்டை அடங்கிய பகுதியின் மேலவை உறுப்பினருக்கு
திரு மீனாட்சி சுந்தரம் இயக்க சார்பாக நிற்க இயக்கம் அனுமதி அளித்தது
ஆனால் அவர் மீது சொல்லப்பட்ட புகார்கள் அடிப்படையில் நடந்த விசாரனையில்
அது உண்மை என அறியப்பட்டதால் . இயக்க ஆதரவு வாபஸ் பெறப்பட்டது
அத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
இதன் விளைவு அரசியல்வாதிகளால் இவர் கண்காணிக்கப்பட்டார்
விளைவு 1972
கல்வி எழுச்சி நாள் மாநில அமைப்பால் அறிவிக்கப்பட்டது
1. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு கோரி இயக்கம் போராடி
வந்தது. டாக்டர் பால் கமிசன் கமிட்டியின் அறிக்கை பரிந்துரைகள்
கிடப்பில் போடப்பட்டன.
2. 150க்கு மேற்பட்ட ஒன்றியங்களில் முதல் தேதி ஊதியம் வழங்கப்படவில்லை
பல ஒன்றியங்களில் கல்வி நிதிகள் முறையாக நிர்வகிக்க படாததால்
ஆசிரியர்கள் சலுகைகள் கிடைத்தபாடில்லை.
3. மாறுதல் என்ற பெயரால் அரசியல் வாதிகளால் ஆசிரியர்கள் பந்தாடப்பட்டனர்
4. ஆசிரியர்கள் குடும்பக்கட்டுப்பாடு போன்ற இதரப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது போன்ற கோரிகைகள் மீது 1972 சனவரியில் கல்வி எழுச்சி நாள்
ஆசிரியர்கள் கல்விச்சட்டங்கள் எரித்தல் -மறியல் செய்தல் போன்ற நடவடிகையில்
ஈடுபட்டனர்
இயக்க முடிவின் படி கல்வி அமைச்சர் வீட்டு முன் 19 பேர் மறியல் செய்ய சென்ற
போது கைது செய்யப்பட்டனர். மாநில தலைவர மீனாட்சி சுந்தரம் போராட்டத்தில்
ஈடுபடவில்லை சிறைக்கும் செல்லவில்லை அரசுக்கு ஆதரவாக முதல் மீனாக மாட்டினார்
முதல் மீனைகொண்டு மற்றவர்களை வளைப்பது எளிது
அதலால் தி.மு.க அரசு அமைச்சர்கள் முதல்வர்கள் ஆகியோரை கொண்டு
மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்றே ஆசிரியர்களுக்கு முதல் அடி விழ அரம்பித்துவிட்டது.
ஆம் இவர்கள் அக்கட்சி ஆட்சியில் போரட வேண்டாம் என அறிக்கக்விட்டவர்கள்தான் .
*முத்துசாமி பணத்துக்காகவும் பதவிக்காகவும் ஓடியவர் . இங்கே இருந்தால்
அடுத்தது பதவி கிடைக்காது என்ற நிலையில் மாஸ்டர் மணிவிழ◌ாவின்
போது மாஸ்டருக்கு அளித்த நன்கொடையை மாஸ்டர் இயக்க கட்டிடம் கட்ட
80000 கொடுத்ததையும் இயக்க தளவாடச்சாமன்களையும் எடுத்துக்கொண்டு ஓடியவர்.
தற்போது நிரந்தர பதவியில் …………உள்ளார். ஓய்வு பெற்றாலும் விட்டுககொடுக்க
மனம் இல்லை .
1984 மாநில தேர்தலில் பொதுஉடமை கொள்ளையில் மட்டுமே ஈடுபாடு
கொண்ட அரசியல் வாதிகளால் துண்டப்பட்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியை கைபற்ற நினைத்து செயல் பட்டவர்கள் .மாநில பதவி எட்டா
கணியாகி விட்டதால்.டிசம்பர் 1984 பேரணி உண்ணாவிரதத்தில் தேர்தலில் தோற்ற
ந.வீரையன் அப்துல் மஜித் ஆகியோர் த◌ாங்களே மாநில தலைவர்
பொதுச்செயலர் என அறிவித்துகென்டனர்.
இவர்கள் மீண்டும் பிளவு பட்டது தனி வரலாறு .
இவர்கள் ஆங்காங்கே உள்ள சிறு குழுக்களை வைத்துகொண்டு
மாநில அமைப்புஎன்று கூறிகொள்வதார் கேவலப்பட்டு தொடக்கப்பள்ளி
ஆசிரியர்கள் நிற்கிறோம் என்றும்.
எந்த அரசியலுக்கும் அடிபணியாது எந்த அரசியல் கட்சியின் பின் நிர்காது
எதிர்கட்சிகளின் ஆலோசனைகளுக்கு செவிசாய்காது ஆசிரியர் நலனே தன் நலன்
என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இன்றும் என்றும் செயல்படும்
Saturday, 13 April 2013
அந்த 18 நாட்கள் |
|
| 1972 இயக்கத்தின் வரலாற்று பங்கங்களில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்படவேண்டிய | |
| ஆண்டாகும் . | |
| ஆசிரியர்களின் இயக்க வரலாற்றில் முதன் முதலில் நமது இயக்க சிங்கங்கள் சிறை சென்றதும்ம. | |
| 1020 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்டு செய்யப்பட்டதும் அப்போதுதான் . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி | |
| ஆசிரியர் கூட்டணியின் மாநில ,மாவட்ட ,கிளைப்பொறுப்பாளர்கள் தொண்டர்கள் ஆகியோர் | |
| 18 நாட்கள் சிறையில் இருந்ததும் அந்த ஆண்டுதான். | |
| பாரதப்போர் நடைபெற்றதும் 18 நாட்கள் தன் | |
| தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய குருசேத்திரப்போரும் 18 நாட்கள் தான். | |
| பழனிப் பொதுக்குழு முடிவுபடி மறியல் நடத்த முடிவு | |
| கல்வி எழுர்ச்சி நாள் கோரிகைகள் குறித்து கல்வி அமைச்சர் அவர்கள் வாக்குறுதி தந்தபடி | |
| அறிவிப்புகளை வெளியிடவில்லை எனில் மாநில செயற்குழு மறியல் ◌செய்ய வேண்டும் | |
| என்பது தீர்மாணம். | |
| 1. போராட்டத்தின் தொடக்கம் | |
| சிறப்பு மிக்க தீர்மாணம் | |
| பொதுச்செயலர் பொறுப்பில் இருந்த துணைச்செயலர் பொதுக்குழுவைக்கூட்டிணார். | |
| எப்ரல் 29ல் அமைச்சர் கோரிகைகளை ஏற்று அறிவிப்பு வெளியிடாவிட்டால் | |
| என்ன செய்வது . என்ற கேள்வி பவாதுக்குழுவில் வைக்கப்பட்டது. இதற்கு கோரிக்கைகளை | |
| பெற்றுத்தர செயற்குழு பொறுப்பேற்கும் என்ற பதில் தரப்பட்டது. அப்படி சொல்லக்கூடாது | |
| அறிகை வெளியிடப்பட வில்லை எனில் 30ம் தேதி மாநில செயற்குழு அமைச்சர் | |
| மறியல் செய்து சிறைசெல்ல தயாரா என்ற கேள்வி வைக்கப்பட்டது.இதை செயற்குழு உறுதி செய்தது | |
| அமைச்சர் வீட்டு முன் மறியல் நடத்தப்படும். பங்கு பெறாத மாநில செயற்குழு உறுப்பினர்கள் | |
| அடிப்படை உறுபபினர் பதவியை இழப்பர் என்ற சிறப்பு மிக்க தீர்மாணத்தை அறிவித்தது. | |
| போராட்டக்குழு மற்றும் அமைப்பாளராக தருமபுரி மாவட்ட செயலர் பெ.கந்தசாமி சிறப்பாக | |
| செயல்பட்டார் அவருக்கு துணையாக ஆண்டிப்பட்டி திரு இராமலிங்கம் , தென்னார்காடு மாவட்டத்தின் | |
| செல்லமுத்து இரா பானு,ம.க.முத்துசாமி ,சாமிநாதன் ஆகியோர் உடன் இணைந்து பணியாற்றினர் | |
| போராட்ட நிகழ்வுகள் சட்டமன்ற உறுப்பினர் அறை என் 5 ல் இருந்து மாஸ்டர் ,ஜே.எஸ்.ஆர் மற்றும் | |
| முக்கிய நிர்வாகிகள் செயல்பட்டனர். | |
| தகவல்கள் அனைத்தும் தந்தி முலம் 29.4.1972ல் கொடுக்கப்பட்டது. | |
| அந்த போராட்டத்தின் முதல்நாள் 30.4.1972 மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் | |
| 19 பேர் அன்றைய மாநில தலைவராக இருந்த பெரியவர் ஆரணி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மறியலில் | |
| ஈடுபட 19 பேர் கிளம்பினர். | |
| ஏன் அந்த 19 பேர் என்றால் 1947ல் நடைபெற்ற வேலைநிருத்த போராட்டத்துக்கு மாஸ்டர் | |
| மங்களுருவில் இருந்து 19 பேருடன் சென்னை வந்ததை நினைவு கூறும் வகையில் 19பேர் கலந்து | |
| கொண்டார்கள். | |
| அமைச்சரின் வீட்டை அடைவதற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டார்கள் . கவல் துறையினர் | |
| மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று தடுக்க பொறுப்பாளர்கள் நாங்கள் செல்வோம் என்று | |
| முன்னேரி வலுவாக முன்னேரிச்செல்ல காவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தள்ளு முள்ளு | |
| ஏற்பட்டது. ஆசிரியர்கள் முழக்கங்களை வலுவாக எழுப்பி மேலும் முன்னேற முயன்ற போது | |
| சென்னை துனை கமிஷனர் ஆணைப்படி கைதுசெய்யப்பட்டனர் 19 பேரும். | |
| அன்றைய தினம் குடியரசுதலைவர் வி.வி.கிரி அவர்கள் சென்னை வந்திருந்தார் அவர் கிரீன் வேஸ் | |
| சாலை வழியாக செல்வதால் காவல் துறைக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு பணி இதற்கிடையில் | |
| ஆசிரியர்களை ஒரு வேணில் ஏற்றி பொதுச்செயலர் முத்துசாமியிடம் காவர் துறை கல்வி | |
| அமைச்சர் ஊரில் இல்லை திங்கள் அன்னறு வந்திடுவார் அன்று அமைச்சர் அவர்களை | |
| உங்களிடம் பேசிட ஏற்பாடு செய்கிறே◌ாம்இப்போது நீங்கள் சென்று விடுங்கள் என்று | |
| வேண்டினர். ஆனால் மாஸ்டர் அதை ஏற்கவில்லை பின் வேன் கமிஷனர் அலுவலகம் சென்றது | |
| மாலை 5 மணி கைது செய்யப்பட்ட அணைவரும் அழைக்கப்பட்டோம். | |
| கமிஷனர் முன் நிறுத்தப்பட்டோம். கமிஷனர் அமைச்சரை பார்க்க ஏற்பாடு செய்கிறேன் | |
| பிரச்சணையை பேசி தீர்த்துகொள்ளுங்கள். | |
| மாஸ்டர் உடனே நாங்கள் முன்பே அமைச்சரிடம் இதுபற்றி பேசிவிட்டோம் அமைச்சர்தான் | |
| தான் சொன்னபடி நடக்கவில்லை முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று | |
| கூறி சென்றவர் குறித்த நாளில் அறிவிப்பு வராததால் நாங்கள் பொதுக்குழுவின் முடிவுகள் | |
| படி நாங்கள் மறியல் செய்ய சென்றோம் என கூறினார். | |
| மாலையில் வீட்டுக்கு செல்வதை எவரும் விரும்பவில்லை ஏன் எனில் தீர்வு கிடைக்காது . | |
| முடிவில் கமிஷனர் 15 நாள் ரீமாண்டு செய்தார். | |
மத்திய சிறைச்சாலை - சென்னை சிறை |
|
| வேன் சென்னை மத்திய சிறைக்கு சென்றது அங்கு ஆசிரியர்களிடம் இருந்த வாட்ச் , மோதிரம், | |
| காயிதங்கள் , இதரப்பொருட்கள் , கடைசியில் அறைஞான் கயிறு அத்தனையும் பெற்றுகொண்டு | |
| உள்ளே சட்டை பணியன் ,டிராயர் ,வேட்டியுடன் அனுப்பினர். | |
| சிறைக்காவலர் அனைவரையும் 2 ஆவது குவாரன்டீனுக்கு அழைத்துச்சென்றார். | |
| அவைகள் அரசியல் கட்சியைச்செர்ந்தவர்களை அடைக்கப்பயன்பட்டது.கீழ் பகுதியில் நான்கும் மேலே நான்கும் | |
| ஆக எட்டு அறைளைகொண்டிடுந்தது. | |
| . | |
| ஆசிரியர்கள் நலனுக்காக முதன் முதலில் சிறைக்கு சென்றதை பெருமையாக கருதினர் | |
| ஆளுகொரு அலுமணியத்தட்டும அலுமணிய குவளையும் அளிக்கப்பட்டது. | |
| படுத்துகொள்ள ஆளுகொரு துணி விரிப்பு தந்தார்கள் . இரவு கோதுமைக்களி , சிறிது அரிசி சாதம் | |
| கொடுக்கப்பட்டது. அதன் பின் 2 மண்சட்டிகள் கொடுத்தார்கள் . ஒன்று குடிநீர் வைப்பதற்க்கும் | |
| ஒன்று இரவில் சீறுநீர் கழீப்பதர்க்கும். பின் அனைவரும் கம்பிகளுக்கு பின் அடைக்கப்பட்டனர் | |
| யாரும் கம்பியை எண்ணவில்லை . தம் கோரிகைகளையே எண்ணிபார்த்து உவகை அடைந்தனர் | |
Sunday, 3 March 2013
கண் தானம்
இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே என்னால் இயலாதுது என்று ஒரு நாளும் சொல்லாதே ஏன் எனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன் . இது விவேகானந்தரின் வீர மொழி இந்த வரிகளை படித்து கொண்டிடுந்த போது வேலுரில் இருந்நது ◌ெதொலைபேசி அழைப்பு அதில் சார் நான் ◌ெசொன்னதைப்பபற்றி என்ன முடிவு செஞ்சிங்க மீண்டும் விவேகானந்தரின் வீர◌ெமொழிகள் கண்முன் நின்றது - சரிசார் கண்தானத்தை தொடங்கிவிடுகிறோம் என்று கூறினேன்.முன்நிகழ்வின் விவரம் பிப்ரவரி 12ஆம தேதி இரவு என்னுடைய நண்பரை பலவருடங்களுக்கு பின் சந்தித்தேன். அவர் ஓர் தொண்டு நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார் இப்போது சொந்தமாக கடைவைத்துள்ளார். அவர் என்னிடம் நீங்கள் ஆசிரியர்கள் என்ன செய்கிறிர்கள் என்று கேட்டார் பாடம் நடத்துவோம் என்றேன். எப்படி என்றார் எனக்கு கோவம் வந்தது கரும்பலகையில் எழுதியும் புத்தகத்தைப்பார்த்தும் நடத்துவோம் என்றேன். அடுத்த கேள்விகேட்டார் அப்ப கண் இல்லாதவங்களுக்கு என்றார் நான் தினரிப்போனேன் அதற்க்கு தான் தனியாக பள்ளி இருகிறதே என்றபோது அவர கூறிய விவரங்கள் என் மனதைபாதித்தது 12 வயதுக்குள் லட்சக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆசிரியர்களாகிய நீங்கள் ஏன் கண்தானம் செய்து அதை தமிழகம் முழுதும் உள்ள ஆசிரியர்களிடத்தில் எடுத்துச்சொல்லக்கூடாது. என்று கூறிவிட்டு சென்று விட்டார் அதன் பின் தான் மேலுள்ள வரிகள்
அறக்கட்டளையின் அப்துர்ர ரகுமான் தலைவர் த.கிருஷ்னாஜி யிடம் கையெ◌ாப்பம் பெறுகிறார்.
அருகில் அவர்மனைவி பின்னால் மாவட்ட துனைத்தலைவர் திரு அருன்பிரகாஷ் நின்று கொண்டிருப்பவர் முன்னால் வட்டாரத்தலைவர் டி.எ.டேவீஸ்
பின்னால் நின்று இருப்பது நான் வட்டாரசெயலர்
அறக்கட்டளையின் அப்துர்ர ரகுமான் தலைவர் த.கிருஷ்னாஜி யிடம் கையெ◌ாப்பம் பெறுகிறார்.
அருகில் அவர்மனைவி பின்னால் மாவட்ட துனைத்தலைவர் திரு அருன்பிரகாஷ் நின்று கொண்டிருப்பவர் முன்னால் வட்டாரத்தலைவர் டி.எ.டேவீஸ்
பின்னால் நின்று இருப்பது நான் வட்டாரசெயலர்
| ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுபவை கண்கள். சில காரணங்களால்(பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சகணக்கானோர் பார்வையின்றி, உலகை காண முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் மீண்டும் கண்பார்வை பெற முடியும்.என்ற ஏக்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.அவர்களிளல் இந்தியாவில் 60 லட்சம் குழந்தைகள் கார்வையற்று இருக்கிறார்கள் தமிழ்நாடு தெ◌ாடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (கிருட்டிணகிரி கிளை) இக்குறையை களைய தன்னால் இயன்ற சிறு உதவியை செய்ய முடிவெடுத்து அதன் அறக்கட்டளையான மாவீரன் ஜே.எஸ்.ஆர் - கிருஷ்னாஜி கல்வி அறக்கட்டளை மூலம் முதற்கட்டமாக 101 நபர்கள் கண் தானம் செய்வது எனவும் அது 9.3.2013 அன்று நநடைபெறும் சர்வதேச மகளீர்தின ◌ெகொண்டாட்டத்தின் போது அதற்கான பத்திரங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டு அதன் தொடக்கமாக இயக்கத்தின் முன்னால் மாநில துணைத்தலைவரும் இயக்ககசெம்மல் திரு.த.கிருஷ்ணாஜி முதல் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தார் | ||
| நாம் மறைந்த பிறகும் இவ்வுலகைக் காண வேண்டுமா.. கண்தானம் செய்யுங்கள். கண்தானம் செய்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தவும், கண்தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. | ||
| ஏன் கண்தானம் : நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல்.இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் “கார்னியா’ குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. | ||
| கார்னியா குறைபாடு: கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. விழித்திரையில் பிம்பம் படிவதில்லை. எனவே பார்வை தெரிவதில்லை. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. | ||
| ஒரு வயது குழந்தை முதல் வயது வித்தியாசமின்றி அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி போன்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம்.தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறிநாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருப்பின் அவர்களது கண்கள் தானமாக வழங்கமுடியாது. | ||
| கண்தானம் செய்ய விரும்புவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஒருவர் இறந்தவுடன் அவருடைய கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை ஆப் செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டி பயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் கண்களை தானமளிக்க வேண்டும். | ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 ஆயிரத்து 500 கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இச்சிகிச்சையைப் பெற ஒன்பது லட்சம் பேர் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டுதோறும் இறப்பு எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தாலும் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை 30 ஆயிரமாகவே இருப்பது துரதிஷ்டவசமானது. |
Subscribe to:
Posts (Atom)





