| வரலாறு 6 | தொடக்கக்கவியில் ◌வெள்ளை அறிக்கை கல்வியில் சென்னை மாநில அரசு சார்பில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது . 1.ஆசிரியர்மாணவர் விகித்ம் .1/20 என்பதை 1/40 ஆக மாற்றியது இது சரக அளவில் மொத்த அளவில் கணக்கிடப்பட்டது. |
2.இளநிலை ஆசிரியர் பணியிடத்தில் இடைநிலை ஆசிரியரை நியமித்து இடைநிலை ஆசிரியர் ஊதியம் தருவது நிறுத்தப்பட்டது. |
|
3. ஒவ்வொரு தொடக்கப்பள்ளிக்கும் 5 ஆம் வகுப்புக்கு ஆங்கிலம் கற்பிக்க இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. |
|
* ஆசிரியர் மாணவர் விகிதாச்சார நடைமுறையால் 20000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு செய்யப்பட இருந்தது. |
|
*இளநிலை ஆசிரியர் பணியிடத்தில் இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவது நிறுத்தப்பட்டதன் மூலம் 17000 ஆசிரியர்களுக்கு ஊதியகுறைப்பு ஏற்பட்டது. |
|
*ஆங்கிலம் கற்பிக்க இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் 26000 இளநிலை ஆசிரியர்களுக்கு பணி இழப்பு ஏற்பட இருந்தது. |
|
மேற்கண்ட மூன்று பிரச்சனைகளைபயும் இயக்கம் எதிர்கொண்டு கடுமையாக போராட முடிவு செய்தது. |
|
மாநிலத் துணைத் தலைவர் திரு இராமசாமி ரெட்டியார் தலைமையில் சேலத்தில்இருந்து சென்னை நோக்கி மிதிவண்டி பேரணிநடத்தினர். இதன் மூலம் ஆசிரியர்கள் இடைய எழுற்சி ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் நாகையில் இருந்து மாநிலத்தலைவர் திரு. இராமையாதேவர் தலைமையில் ஓர் மிதிவண்டி பேரணி தென் ஆர்காடு மாவட்டம் வழியே வந்த போது நுற்றக்கணக்கான ஆசிரயர்கள் பேரணியில் இணைந்து கொண்டனர். இப்படியாக தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் இருந்து ஒரு பேரணியும் . தென் கிழக்கு பகுதில் இருந்து ஒரு பேரணியும் சென்னையை நோக்கி இரட்டைக்குழல் துக்பாக்கி போல் வந்தது. சென்னை நோக்கி வந்த மிதிவண்டி பேரணிகள் ஒன்று கூடி சென்னை மாநகரில் போர் பரணி பாடி வந்தன. |
|
| அரசியல் கட்சிகள் காட்டாத உணர்வையும் கூட்டத்தையும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்று நடத்திக்காட்டி அரசை பணியவைத்தது. | |
| அதன்படி | |
1. ஆசிரியர் மாணவர் விகிதம் மொத்த அளவில் கணக்கிடப்படாமல் புதிதாக ஆசிரியர் பணியிடம் ஏற்படும் வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இதனால் இழப்பு வராது என்பதற்காக அரசாணை 250 வெளியிடப்பட்டது. |
|
2. 1.4.58 க்கு முன் இளநிலை பணியிடத்தில் பணியாற்றி இடைநிலை ஆசிரியர்கள் |
|
எந்த வகுப்பில் இருந்தாலும் அவர்களுக்கு ஊதிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. |
|
3. ஆங்கிலம் கற்பிக்க இடைநிலை ஆசிரியர் நியமனம் பெறுவதன் மூலம் |
|
ஏற்படும் உபரி இளநிலை ஆசிரியர் பணியிடம் கூடுதல்பணியிடமாக கணக்கிடப்பட்டு பணியிடங்கள் இழப்பு தவிற்கப்பட்டது. |
Tuesday, 5 February 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment