Tuesday, 5 February 2013


வரலாறு 8     முதல் ஊதியக்குழு
1960 ல் முதல் ஊதிய  ஆணைக்குழு அமைக்கப்பட்டது .அது அரசு ஊழியர்களின்
ஊதிய விகிதங்களை மட்டுமே மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது.
இதைக்கண்ட நமது இயக்கம். 1960 ஜனவரியில் கடலுரில் 4 வது மாநாட்டை 
நடத்தியது.பல்லாயிரக்கணக்கில் ஆசிரியர்கள் திரண்டனர். அதுவரை அந்நகரம்
கண்டிராத மாபெரும் ஊர்வலம் .அதைக்கண்ட அன்றைய கல்வி அமைச்சர் 
சி.சுப்பிரமணியம் மேடையிலேயே ஆசிரியர்கள் ஊதியத்தை முதல் 
ஊதியக்குழு பரிசிலனை செய்து புதிய ஊதியத்தை அறிவிக்கும் என்று அறிவித்தார்
அக்கூட்டத்தில் இராமையத்தேவரின் தலைமை உரை இத்தகைய அறிவிப்புக்கு
காரணமாக அமைந்தது.

கல்வித்துறை சார் பணியாளர்களுக்கு அப்போதெல்லாம் அங்கீகாரம் பெற்ற 
தனிச்சங்கம் இல்லை .அங்கீகாரம் பெறாததால் அச்சங்கம் என்.ஜி.ஓ யூனியனுடன்
 இணைப்புச்சங்கமாக செயல்பட்டது,  நமது இயக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 
அதிகம் . என்.ஜி.ஓ. வில் கீழ்நிலை எழுத்தர்  பின்னர் இளநிலை எழுத்தர் என்றும் பெயர் மாற்றப்பட்ட பணியாளர்கள் எண்ணிகை அதிகம்.
இதில் எழுத்தர்கள் எஸ்.எஸ் எல்.சி தேர்ச்சி பெற்றவர்கள் 
ஆசிரியர்கள் எஸ்.எஸ் எல்.சி தேர்ச்சி பெற்று இரண்டாண்டு பட்டயப்படிப்பு 
படித்தவர்கள் .

1960க்கு முன் இளநிலை எழுத்தருக்கு அடிப்படை ஊதியம்  ரூ 45/-
இடைநிலை ஆசிரியர்களுக்கு             அடிப்படை ஊதியம்  ரூ 40/-
தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு    அடிப்படை ஊதியம்  ரூ 37/-
நியாய அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கூடுதல் 2 ஆண்டு பட்டய படிப்புக்கு 
கூடுதல் ஊதியம் தரவேண்டும். ஆனால் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது.
முதல் ஊதியக்குழுவில் இந்த பிரச்சணையை இயக்கம் முன்நிறுத்தி அறிகை தந்து
வாதிட்டது.  அதேப்போல் ஒவ்வோர் நிர்வாகத்திலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும். வெவ்வேறு ஊதிய விகிதம் இருப்பதை மாற்றி ஒரேகல்வித் 
தகுதிஉடைய ஆசிரியர்களுக்கு ஒத்த ஊதியம் வழங்கவேண்டும் என்று வற்புறுத்தியது.
இந்த இரண்டு கருத்தாலும் என்.ஜி.ஓ யுனியன் முரண்பட்டு நின்றது. பழைய நிலையே இருக்க வேண்டும் என்பது அவர்களின் நிலையாகும்.
ஆனால் இயக்கத்தின் வாதத்தை ஊதிய ஆணைக்குழு நியாம் என்று ஏற்றுகொண்டது

No comments:

Post a Comment