வரலாறு 8 இயக்கத்தின் மறுமலர்ச்சியும் காரணமான காமராசரும். |
|
| 1955-ம் ஆண்டு மார்ச் 27-ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், "சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது.(தற்போதய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க முதல்_அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் கல்வி இலாகா டைரக்டர் நெ.து.சுந்தரவடி வேலு அமர்ந்திருந்தார். அப்போது சட்டென்று தொடக்கப்பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்று, சுந்தர வடிவேலுவிடம் காமராஜர் விசாரித்தார். "தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் ஐந்து லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் செலவாகும்" என்று சுந்தரவடிவேலு கூறினார். மேலும் கொஞ்சம் விவரங்களை கேட்ட மாநாட்டில் காமராஜர் பேசுகையில், மதிய உணவு திட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அவர் கூறியதாவது:_ "தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்கவேண்டும். பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட, எல்லாக் குழந்தைகளும் படிக்கப்போவது இல்லை. ஏழைப்பையன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும். இதற்கு, தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம்." என்று காமராஜர் கூறினார். பின்னரே மதிய உணவு திட்டம் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பொறுமையாக பதிலளித்தார். முடிவில் சத்துணவு திட்டத்தை அமுல் நடத்துவது என்றும், முதலில் எட்டைய புரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராஜர்,”"அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித் தோம். இப்போது பள்ளிக் கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்கு பிச்சை எடுக்க சித்தமாக இருக்கிறேன்”- இவ்வாறு காமராஜர் கூறியபோது, கூட்டத்தினர் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். | |
| இயக்கத்தின் மையம் வட்டாரம் . மாவட்டம் என்ற முறையான அமைப்பு முறைக்கு | |
| மாற்றம் பெற்றது. ஒன்றிய அளவில் அமைப்புகள் செயல்படும் என்ற உடன் | |
| இயக்க ◌செயல்பாடுகள் வேகம் பெற்றது. | |
| தமிழக அரசால் தொடக்கக் கல்விகள் திறந்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பதற்கு யாரும் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை. அரசிற்கு நிதி ஏதும் கட்டணமாக அளித்திட தேவையில்லை. இன்னும், சொல்லப்போனால் பள்ளிக்கூடம் திறப்பதற்காக யாரும் எந்த அதிகாரியையும் தேடியும் கூட போக வேண்டாம். | |
| அதிகாரிகளே ஊர் ஊராக சென்றனர். எங்கெல்லாம 300-500 பேர் வாழும் சிற்றூர்கள் உண்டோ அங்கே அதிகாரிகளே சென்றனர். ஒரு பள்ளிக் கூடத்திலிருந்து ஒரு மைல் கல் தொலைவில் இன்னொரு கல்வி வருமாறும் பார்த்துக் கொண்டனர். இந்த இரண்டு அடிப்படைகளைக் கொண்டு, 500 பேர் வாழும் சிற்றூர் தோறும் பள்ளிகள் நிறுவப்பட்டன. ஊரில் இருந்த மக்களிடத்தில் கல்வி மேம்பாடு எடுத்து சொல்லப்பட்டது. ஒரு கட்டிடத்தை வாடகை இன்றி பள்ளிக்கூடத்திற்காக தரமக்கள் ஊக்குவிக்கப்பட்டு, பள்ளிக் கட்டிடங்கள் வாடகை இன்றி பெறப்பட்டு, அங்கே பள்ளிக்கூடம் தொடங்கி வைக்கப்பட்டது. | |
| உடன் வரும் ஆசிரியர்களில் அந்தச் சிற்றூர் பள்ளி ஆசிரியரும் அங்கேயே அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் பள்ளிக்குரிய கரும்பலகைகள், மேசை நாற்காலிகள், பதிவேடுகள் முதலியவையும் அதே நேரத்தில் வழங்கப்பட்டது. பள்ளி செயல்படுவதற்குரிய வகையில் முறைப்படுத்தப்பட்டவுடன், அந்தக் குழு அடுத்த சிற்றூரை நோக்கி செல்லும். | |
| சென்னை சட்டமன்ற உறுப்பினரும். மாகாணக் கல்வித்துறைக்கு என்றும் உறுதுணையாக விளங்கிச் செயல்பட். உண்மையான பொதுநல உணர்வும் இயற்கையான கல்வி நாட்டமும் கொண்ட இராமசுப்பு, சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். ஆசிரியர்களையும் கல்வி அலுவலர்களையும் தனது ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, பள்ளி இல்லாத ஊர்களைத் தேடித் தேடிச் சென்றார். | |
| தடமில்லாத புஞ்சைக் காடுகளின் ஊடே பயணம் செய்தார். மற்றோர் ஜீப்பில் கரும்பலகைகள், மேசை நாற்காலி கள் பதிவேடுகள் ஆகியவை வந்தன. | |
| சென்ற ஊர்ப் பெரியவர்களைப பிடித்து, ஏதாவதொரு, கட்டடத்தை வாடகை இன்றி பெற்று, அங்கே பள்ளியைத் தொடங்கி வைத்தார். | |
| ஊரார், மாவட்ட ஆட்சிக்குழு அலுவலகத்திற்குப் பலமுறை நடையாய், நடந்து அலுப்பதற்குப் பதில், ஆட்சிக் குழுத் லைவரே ஊர்களைத் தேடிச் சென்று பள்ளிகளைத் தொடங்கியதால், கலவித்துறை இயங்குதல் பணி எளிதாக இருந்தது, அலுவலக்க் கோப்புகள் படிப்பதும் காலதாமதம் ஏற்படுவதும் நீக்கப்பட்டன. | |
| இதனால் கரும்பலகைகள், மேஜைகள், நாற்காலிகள், கடிகாரங்கள் முதவியவற்றை கிராம மக்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு அளித்தார்கள். பல இடங்களில் பள்ளிக்கூடங் கட்டடங்களை விரிவுபடுத்திப் புதியதாக அறைகளை அமைக்கவும் மக்கள் தயாராக முன்வந்தனர. இந்த அனுபவத்தின் மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான பொருள்கள் முதலியவற்றை நன்கொட்யாக அளிதார்கள்.அடிப்படையில் பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டிற்காக விரிவான மக்கள் இயக்கமாக காமராசரால் மாறியது. | |
| இதற்கிடையில் 1960-61 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதியில் 6லிருந்து 11 வயது வரையிலான குழுந்தைகளுக்கு கட்டாய கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது | |
| இந்த மாற்றங்களால் ஒன்றியங்களில் நு◌ாற்றுடகண்க்கான ஆசிரியர்கள் | |
| நியமனம் செய்யப்ட்டனர். புதிய ஆசிரியர்கள் முற்போக்கு எண்ணங்கள் | |
| கொண்ட இளைஞர்களால் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் பலமும் பலமடங்காக | |
| பெருகியது. | |
| 1960 அடோபர் 2ல் 365 ஊராட்சி ஒன்றியங்களாகப்பிரிக்கப்பட்டு | |
| புதிய நிர்வாகமுறைக்கு கீழ் தொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஒப்படைக்கப்பட்டன. | |
Thursday, 7 February 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment