Tuesday, 29 January 2013

இயக்க வரலாறு  4                                
         1953-54  அன்றைய முதல்வர் ராஜாஜி அவர்கள் கல்வித்திட்டத்தில் ஓர் புதிய நடைமுறையைக்கொண்டு வந்தார் .பள்ளிக்கு வராத மற்றும் பள்ளிளயில் சேராத  மாணவர்களையும் படிப்பின் கீழ் கொண்டு வர இருவேளைப்
பள்ளளிகளாக ஆக்ககி பள்ளி வேலைநேரம் 5 மணியான  இருந்ததை காலை 4 மணிநேரமாகவும் மாலை 4 மணிநேரமாகவும் மொத்தம் 8 மணிநேரம் ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டும் என 
வற்புறுத்தப்பட்டது. இதனை குலக்கல்வித்திட்டம்- (1952-ஆம் ஆண்டு தமிழக முதல்வரான ராஜாஜி புதிய கல்வித்திட்டம் ஒன்றை வெளியிட்டார். அதன்படி கிரமப்புறத்தில் தொடக்கக்கல்வி பயிலும் மாணவர்கள் முழுநாள் படிப்பதற்குப் பதில், அரைநாள் படித்துவிட்டு மீதி பாதி நாள் தத்தம் குலத் தொழிலைச் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தங்கள் குலத் தொழிலும், ஓரளவு எழுத்தறிவும் பெறும் வகையிலான இதனைக் குலக் கல்வித் திட்டம் என அழைத்தார்.)-,இது ஆசிரியர்களுக்கு வேலை அதிகம் என்பதால் மட்டும் அல்ல மாணவர்கள் அவர்களின் குல தொழிலை செய்யவேண்டும் என்பது அவனை படிப்பில் ஆர்வம் இல்லாதவனாக்கிவிடும். ஒருவித அடிமைபண்பும்  வளரும என்பதற்காக இதை எதிர்த்து நாமக்கல்லில் இருந்து முன்னாள் மாநிலத்தலைவர் அன்றைய மாநில துனைத்தலைவர் நல்லிபாளையம் ராமசாமிரெட்டியார்  அவர்கள் மிதிவண்டி பேரணி சென்னையை நோக்கி நடத்தினர். அந்தந்த பகுதிகளில் இருந்து சென்னையை நோக்கி பெரும் மிதிவண்டி பேரணி மெரினா கடற்ரையை மற்றுமொரு ஆசிரியர்கடலாக்கியது. அந்த பிரமாண்டமான உணர்வுபூர்வமான கூட்டத்தில் நாங்கள் தான் தமிழகம் என்ற நிலைப்பாட்டை இயக்கம் உருவாக்கியது முதன் முதலாக முதல்வரின் திட்டத்தினை எதிர்த்து அரசின் ஆசிரியர்களின் உணர்வுவை அறிந்து கொண்டவர்கள் அன்றைய கூட்டத்தல் பல அரசியல் 
கட்சித்தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்குபெற்றனர்.
ஆம் தமிழகம் முழுவதும் வந்த ஆசிரியர்கள் எழுற்சி அனைவரையும் சிந்திக்கச்செய்தது..  மறுநாள் சட்டமன்றத்தில் இதன் தாக்கம் அன்றய முதல்வரை இராஜினாமா செய்ய வைத்து.  அன்றிலிருந்து
இன்றுவரை நாம் எடுத்ததை முடிக்கும் பேரியக்கமாக
இருக்கிறோம்- அடுத்தது வரலாற்று சிறப்பு மிக்க மூன்றாவது மாநாடு






No comments:

Post a Comment