Sunday, 27 January 2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரலாறு     1 

''''தோற்றம்'''''''
               இந்தியாவில் ஆசிரியர் சங்கம் 1920ல் சென்னையில் தான்  தொடங்கப்பட்டது. 

               அதன் பெயர் சென்னை ஆசிரியர்கள் கில்ட்
               அப்போது தான் பெண் ஆசிரியர்களுக்காகவும் சங்கம் தோண்றியது.
               இதன் காரணம் என்ன என தெரியுமா-..? 1919ல் அமைக்கப்பட்ட ஊதியக்குழு ஆணைதான்                                                     
               அதற்கு காரணம்.
                
     ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  சென்னை ராஜதானி என்று இருந்தபோது மாகா அளவில் தென் 
     இந்திய ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் இருந்தது.அதில் கல்லு◌ாரிமுதல் தொடக்கப்பள்ளி வரை அனைத்து ஆசிரியர்களும் இடம் பெற்று இருந்தது. அதன் பதவிகளை கல்லு◌ாரி ஆசிரியர்களே அனுபவித்து வந்தனர் (மேலவை உறுப்பினர் உள்பட) இதனால் கிராமங்களில் இருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் அடைந்தனர்.
இச்சங்கத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதிநிதித்துவம் சரியாக அளிக்கப்படவில்லை 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1946ல் கர்னு◌ாலில் நடைபெற்ற  மாநாட்டில் இருந்து வெளியேரி தங்களுகென  தனியான இயக்கத்தை மாஸ்டர் இராமுன்னி அவர்களை அமைப்பாளராக கொண்டு .சென்னை மாகான ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சம்மேளனம். 
 இயக்கத்தை வளர்க்க  மாஸ்டர் இராமுன்னி அவர்களின் தலைமையில் 19 பேர் மிதிவண்டிகளில் மலபார்  மாவட்டத்தலைநகர் கோழிகோட்டில் இருந்து தமிழகம் ஆந்திரம் கர்நாடகம் ஆகிய பகுதிகளில் இயக்கத்தை வளர்க்க பாடுபட்டனர்.
முதல் போராட்டம் 
1946ல் தொடங்கப்பட்ட இயக்கம் சென்னை மாகாண ஆசிரியர் சம்மேளனம் என்று பெயர். 1947 ல் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்து . அரசுக்கு நோட்டீஸ்  அனுப்பியது.56  நாட்கள் போராட்டம் நடைபெற்றது .அதன் காரணமாக அரசு இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.இடைகால நிவாரணம் வழங்கி ஊதிய பரிசிலனைகுழு அமைத்துது. இதன் பரிந்துரையால். ஆசிரியர்கள் ஊதிய மாற்றம் பெற்றனர்.

No comments:

Post a Comment