Tuesday, 29 January 2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரலாறு 2
1947 வேலைநிறுத்தம் பற்றி விரிவாக காண்ப  அன்று சென்னை மாகா ண ஆசிரியர் சம்மேளனம்   (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) ,,மலபார் ஆசிரியர் கில்டு ,தென் இந்திய ஆசிரியர்  சங்கம்  ஆகிய மூன்று  சங்கங்கள் வேலைநிறுத்தம் வேண்டுமா வேண்டாமா என வாகெடுப்பு நடத்தின அதில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என 95 சதவீதம் பேர் வேலை நிறுத்தம் வேண்டும் என வாக்கு அளித்தனர்.1947 ஜீன் 15ல் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மத்திய தொழில் துறை அமைச்சர் திரு. டி.டி கிருஷ்னமாச்சாரி தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினார் .  இதன் பயனாக லோயர் கிரேடு  (5ஆம் வகுப்பு முடித்த ) ஆசிரியர்களுக்கு ரூ 18. பயிற்சி பெற்ற ஐயர் கிரேடு ஆசிரியர்களுக்கு ரூ 25-30  பயிற்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 35-1-45 என சம்பளம் உயர்ந்தது.                                     
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்    கூட்டணியின்                                    முதல் மாநில மாநாடு                  1949                                                                                                                  விழுப்புரத்தில் மாநில மாநாடு நடந்தது. சென்னை கல்விச்சட்டம் 154 ஆம் விதிப்படி ஆசிரயர்கள் எந்த கட்சியில் உறுப்பினராக இருந்தாலும் பணியில் இருந்து கட்டாயமாக இராஜினாமா செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது ஆசிரியர்களின் அரசியல் சுதந்திரத்தை ப்பரிக்கும் இந்த விதி 1948 இறுதியில் அமலாக்கப்பட்டது. காவல் துறை கொடுக்கும் பட்டியலுகேற்ப்ப நடவடிகை தொடர அரசு வழி செய்தது.மாஸ்டர் அவர்களின் சான்று இரத்து செய்யப்பட்டது.
சங்கம் அமைக்க உரிமை
1950 ல் நாடு குடியரசு ஆனது .புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தது
 ஆங்கில அரசின் சட்டங்கள் பல ரத்தாகின. புதிய அரசியல் சாசனப்படி சங்கம் அமைக்க உரிமை வழங்கப்பட்டது.
இயக்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டு வெற்றிபெறப்பட்டது.
1952 ல் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அரசு மாநில அளவுச்சங்க செயல்பாட்டை தடைசெய்ததை நீக்கி உத்தரவிட்டது . ஆசிரியர் சங்கங்கள் செயல்பட அரசு அங்கீகாரம் தேவையில்லை என அரசின் கொள்கை டமுடிவு அரசாணையின் முலம் அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment