Wednesday, 30 January 2013

இயக்க வரலாறு 51957 ல் நமது இயக்கம் மீண்டும புத்துயிர் பெற்று  மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நடத்தியது . அந்த மாநாட்டில்  தான் தமிழ்ந◌ாடு ஆரப்பப்பள்ளி ஆசிரியர் சம்மேளனம் என்ற பெயரை அழகுத்தமிழில் -  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாம் எப்போதுமே முன்னோடிகள் தான் ..அதன் பின் இயக்கத்தின் செயல்பாடுகள் பட்டி தொட்டி எல்லாம் பரவலாயிற்று.சென்னைக்கு வெளியே  தஞ்சையைச் சேர்ந்த திரு .இராமையாத்தேவர்  மாநிலத்தலைவர் பொறுப்பை ஏற்றார்.   அதுவரை பென்சன் மற்றும் கிராஜீவிட்டி இன்ஸ்சூரன்ஸ் ஆகியன வழங்கப்பட்டன.1957க்கு பின் இயக்கம்ம மாவட்டங்களில் எல்லாம் வருவாக உருவெடுத்தது மீண்டும் இயக்கம் நன்கு வளர்ந்தது மாநில அளவில் தனிப்பெரும் இயக்கமாக உருவாகியது.

Tuesday, 29 January 2013

இயக்க வரலாறு 3 
1952ல் சென்னையில் இரண்டாவது மாநில மாநாடு அப்போது சட்டமன்ற 
தேர்தல் நேரம்.இம் மாநாடு higher greade ஆசிரியருக்கு 27-30 
என்றும் இடைநிலை ஆசிரியருக்கு 37-1-45 என்றும் 
ஊதியம் உயர்த்தி வழங்க இந்த மாநாடு வழிசெய்தது

இயக்க வரலாறு  4                                
         1953-54  அன்றைய முதல்வர் ராஜாஜி அவர்கள் கல்வித்திட்டத்தில் ஓர் புதிய நடைமுறையைக்கொண்டு வந்தார் .பள்ளிக்கு வராத மற்றும் பள்ளிளயில் சேராத  மாணவர்களையும் படிப்பின் கீழ் கொண்டு வர இருவேளைப்
பள்ளளிகளாக ஆக்ககி பள்ளி வேலைநேரம் 5 மணியான  இருந்ததை காலை 4 மணிநேரமாகவும் மாலை 4 மணிநேரமாகவும் மொத்தம் 8 மணிநேரம் ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டும் என 
வற்புறுத்தப்பட்டது. இதனை குலக்கல்வித்திட்டம்- (1952-ஆம் ஆண்டு தமிழக முதல்வரான ராஜாஜி புதிய கல்வித்திட்டம் ஒன்றை வெளியிட்டார். அதன்படி கிரமப்புறத்தில் தொடக்கக்கல்வி பயிலும் மாணவர்கள் முழுநாள் படிப்பதற்குப் பதில், அரைநாள் படித்துவிட்டு மீதி பாதி நாள் தத்தம் குலத் தொழிலைச் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தங்கள் குலத் தொழிலும், ஓரளவு எழுத்தறிவும் பெறும் வகையிலான இதனைக் குலக் கல்வித் திட்டம் என அழைத்தார்.)-,இது ஆசிரியர்களுக்கு வேலை அதிகம் என்பதால் மட்டும் அல்ல மாணவர்கள் அவர்களின் குல தொழிலை செய்யவேண்டும் என்பது அவனை படிப்பில் ஆர்வம் இல்லாதவனாக்கிவிடும். ஒருவித அடிமைபண்பும்  வளரும என்பதற்காக இதை எதிர்த்து நாமக்கல்லில் இருந்து முன்னாள் மாநிலத்தலைவர் அன்றைய மாநில துனைத்தலைவர் நல்லிபாளையம் ராமசாமிரெட்டியார்  அவர்கள் மிதிவண்டி பேரணி சென்னையை நோக்கி நடத்தினர். அந்தந்த பகுதிகளில் இருந்து சென்னையை நோக்கி பெரும் மிதிவண்டி பேரணி மெரினா கடற்ரையை மற்றுமொரு ஆசிரியர்கடலாக்கியது. அந்த பிரமாண்டமான உணர்வுபூர்வமான கூட்டத்தில் நாங்கள் தான் தமிழகம் என்ற நிலைப்பாட்டை இயக்கம் உருவாக்கியது முதன் முதலாக முதல்வரின் திட்டத்தினை எதிர்த்து அரசின் ஆசிரியர்களின் உணர்வுவை அறிந்து கொண்டவர்கள் அன்றைய கூட்டத்தல் பல அரசியல் 
கட்சித்தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்குபெற்றனர்.
ஆம் தமிழகம் முழுவதும் வந்த ஆசிரியர்கள் எழுற்சி அனைவரையும் சிந்திக்கச்செய்தது..  மறுநாள் சட்டமன்றத்தில் இதன் தாக்கம் அன்றய முதல்வரை இராஜினாமா செய்ய வைத்து.  அன்றிலிருந்து
இன்றுவரை நாம் எடுத்ததை முடிக்கும் பேரியக்கமாக
இருக்கிறோம்- அடுத்தது வரலாற்று சிறப்பு மிக்க மூன்றாவது மாநாடு






தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரலாறு 2
1947 வேலைநிறுத்தம் பற்றி விரிவாக காண்ப  அன்று சென்னை மாகா ண ஆசிரியர் சம்மேளனம்   (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி) ,,மலபார் ஆசிரியர் கில்டு ,தென் இந்திய ஆசிரியர்  சங்கம்  ஆகிய மூன்று  சங்கங்கள் வேலைநிறுத்தம் வேண்டுமா வேண்டாமா என வாகெடுப்பு நடத்தின அதில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும் என 95 சதவீதம் பேர் வேலை நிறுத்தம் வேண்டும் என வாக்கு அளித்தனர்.1947 ஜீன் 15ல் வேலைநிறுத்தம் நடைபெற்றது. மத்திய தொழில் துறை அமைச்சர் திரு. டி.டி கிருஷ்னமாச்சாரி தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினார் .  இதன் பயனாக லோயர் கிரேடு  (5ஆம் வகுப்பு முடித்த ) ஆசிரியர்களுக்கு ரூ 18. பயிற்சி பெற்ற ஐயர் கிரேடு ஆசிரியர்களுக்கு ரூ 25-30  பயிற்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 35-1-45 என சம்பளம் உயர்ந்தது.                                     
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்    கூட்டணியின்                                    முதல் மாநில மாநாடு                  1949                                                                                                                  விழுப்புரத்தில் மாநில மாநாடு நடந்தது. சென்னை கல்விச்சட்டம் 154 ஆம் விதிப்படி ஆசிரயர்கள் எந்த கட்சியில் உறுப்பினராக இருந்தாலும் பணியில் இருந்து கட்டாயமாக இராஜினாமா செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது ஆசிரியர்களின் அரசியல் சுதந்திரத்தை ப்பரிக்கும் இந்த விதி 1948 இறுதியில் அமலாக்கப்பட்டது. காவல் துறை கொடுக்கும் பட்டியலுகேற்ப்ப நடவடிகை தொடர அரசு வழி செய்தது.மாஸ்டர் அவர்களின் சான்று இரத்து செய்யப்பட்டது.
சங்கம் அமைக்க உரிமை
1950 ல் நாடு குடியரசு ஆனது .புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தது
 ஆங்கில அரசின் சட்டங்கள் பல ரத்தாகின. புதிய அரசியல் சாசனப்படி சங்கம் அமைக்க உரிமை வழங்கப்பட்டது.
இயக்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டு வெற்றிபெறப்பட்டது.
1952 ல் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அரசு மாநில அளவுச்சங்க செயல்பாட்டை தடைசெய்ததை நீக்கி உத்தரவிட்டது . ஆசிரியர் சங்கங்கள் செயல்பட அரசு அங்கீகாரம் தேவையில்லை என அரசின் கொள்கை டமுடிவு அரசாணையின் முலம் அறிவிக்கப்பட்டது.

Sunday, 27 January 2013

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரலாறு     1 

''''தோற்றம்'''''''
               இந்தியாவில் ஆசிரியர் சங்கம் 1920ல் சென்னையில் தான்  தொடங்கப்பட்டது. 

               அதன் பெயர் சென்னை ஆசிரியர்கள் கில்ட்
               அப்போது தான் பெண் ஆசிரியர்களுக்காகவும் சங்கம் தோண்றியது.
               இதன் காரணம் என்ன என தெரியுமா-..? 1919ல் அமைக்கப்பட்ட ஊதியக்குழு ஆணைதான்                                                     
               அதற்கு காரணம்.
                
     ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்  சென்னை ராஜதானி என்று இருந்தபோது மாகா அளவில் தென் 
     இந்திய ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் இருந்தது.அதில் கல்லு◌ாரிமுதல் தொடக்கப்பள்ளி வரை அனைத்து ஆசிரியர்களும் இடம் பெற்று இருந்தது. அதன் பதவிகளை கல்லு◌ாரி ஆசிரியர்களே அனுபவித்து வந்தனர் (மேலவை உறுப்பினர் உள்பட) இதனால் கிராமங்களில் இருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் அடைந்தனர்.
இச்சங்கத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதிநிதித்துவம் சரியாக அளிக்கப்படவில்லை 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1946ல் கர்னு◌ாலில் நடைபெற்ற  மாநாட்டில் இருந்து வெளியேரி தங்களுகென  தனியான இயக்கத்தை மாஸ்டர் இராமுன்னி அவர்களை அமைப்பாளராக கொண்டு .சென்னை மாகான ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சம்மேளனம். 
 இயக்கத்தை வளர்க்க  மாஸ்டர் இராமுன்னி அவர்களின் தலைமையில் 19 பேர் மிதிவண்டிகளில் மலபார்  மாவட்டத்தலைநகர் கோழிகோட்டில் இருந்து தமிழகம் ஆந்திரம் கர்நாடகம் ஆகிய பகுதிகளில் இயக்கத்தை வளர்க்க பாடுபட்டனர்.
முதல் போராட்டம் 
1946ல் தொடங்கப்பட்ட இயக்கம் சென்னை மாகாண ஆசிரியர் சம்மேளனம் என்று பெயர். 1947 ல் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்து . அரசுக்கு நோட்டீஸ்  அனுப்பியது.56  நாட்கள் போராட்டம் நடைபெற்றது .அதன் காரணமாக அரசு இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.இடைகால நிவாரணம் வழங்கி ஊதிய பரிசிலனைகுழு அமைத்துது. இதன் பரிந்துரையால். ஆசிரியர்கள் ஊதிய மாற்றம் பெற்றனர்.

Saturday, 26 January 2013

25.1.2013 அன்று மகளீர்க்கான தலைமைப்பண்பு பயிற்சி கிருட்டிணகிரியில் நடைபெற்றது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு .பொன்.குமார் ,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு அன்பு ,மகளீர் கல்லுரி விரிவுரையாளர் திருமதி கீதா  உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் திரு கிருஷ்ணன் .