Sunday, 1 September 2019

29.8.2019 ஆர்பாட்டம்
























கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதிய கல்விக்கொள்கை 2019 குறைகளை களைந்திட மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் குலத்தொழில் கல்வித் திட்டத்தை கொண்டு வரும்  மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன போராட்டத்திற்கு  மாவட்ட தலைவர் சின்னசாமி  கிருஷ்ணாஜி, ரங்கப்பன், ரங்கா ரெட்டி, கிருஷ்ணப்பா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு புதிய கல்விக்கொள்கையில் உள்ள குறைப்பாடுகளைக் கண்டித்து கண்டன உரை ஆற்றினார்கள்.

மேலும் இந்தக் கண்டன ஆர்பாட்டத்தின் போது .....

புதிய கல்விக்கொள்கையில் 
10, 20  பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த பள்ளியாக செயல்படுத்தி, கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்களின் கல்விக்கு கேடு விளைவிப்பதை கைவிட வேண்டும்,

மத்திய அரசு 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு தகுதித் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டியும்,

12 ஆம் வகுப்பு முடித்தாலும் தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரிகளில் சேரமுடியும் என்பதை முற்றிலும் கை விட வேண்டும்,

குலக்கல்வி திட்டத்தை கைவிட வேண்டும், 
மும்மொழிக்கொள்கையை கொண்டுவந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பதை கைவிட வேண்டும்,

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.

இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  எராளமான ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment