மகளிர் தினவிழாவை யொட்டி தலைமை தபால்நிலையத்தின் பணிகள் பற்றி அறிந்து கொள்ள கிருஷ்ணகிரி தலைமை தபால்நிலையம் சென்றோம்.
அங்கு போஸ்ட் மாஸ்டர் அவர்களிடம் முன்பே அனுமதி பெற்று இருந்தோம் .
அஞ்சல்நிலையத்தில் பயன்படுத்தப்படும் தபால்கள் பற்றி போஸ்ட் மாஸ்டர் விரிவாக கூறினார்
தபால் பிரிக்கப்படும் இடத்தை காண்பித்து அது செயல்படும் முறைகளையும் இங்கிருந்து ஜோலார்பேட்டை சென்று அங்கு பிரிக்கப்படுவதையும் தெளிவாக கூறினார்
அதேப்போல் பாஸ்போர்ட் அலுவலகம் தலைமை தபால்நிலையங்களில் தற்போது செயல்படுவது பற்றி கூறினார்
அங்கு போஸ்ட் மாஸ்டர் அவர்களிடம் முன்பே அனுமதி பெற்று இருந்தோம் .
அஞ்சல்நிலையத்தில் பயன்படுத்தப்படும் தபால்கள் பற்றி போஸ்ட் மாஸ்டர் விரிவாக கூறினார்
சுகன்யா சம்ரிதி யோஜனா குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக இந்தச் செல்வ மகள் திட்டம்
இருக்கிறது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின்
கீழ் முதலீடு செய்யத் துவங்கி 15 வருடம் வரை தொடர்ந்து முதலீடு செய்ய
முடியும். இந்தத் திட்டத்தில் தற்போது 8.5 சதவீத வட்டி விகித லாபம்
அளிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் வரி விலக்கும் பெற முடியும். என்று கூறினார். மற்றும் இதர டெப்பாசிட் திட்டங்கள் பற்றியும் கூறினார்.
மை ஸ்டாம்ப் திட்டம் இத்திட்டத்தில்
ரூ.300 கட்டணம் செலுத்தி, வாடிக்கையாளர் விரும்பும்
புகைப்படத்தை ரூ.5 மதிப்புள்ள 12 ஸ்டாம்புகளில் அச்சிட்டு பெறலாம்.இத்திட்டத்தில் தாங்கள் விரும்பிய படங்களை பொடுத்து அதை அச்சிட்டு பெறலாம்.
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் பற்றியும் அவை பெறப்பட்டு வரவு வைக்கப்படுவதையும் கூறினார். அதேப்போல் மனியாடர் திட்டம் பற்றியும் ஸ்பீடு போஸ்ட் திட்டம் பற்றியும் விளக்கினார்.
தபாலில் முத்திரையிடுதல் பற்றி விளக்கினார்.
தபால் பிரிக்கப்படும் இடத்தை காண்பித்து அது செயல்படும் முறைகளையும் இங்கிருந்து ஜோலார்பேட்டை சென்று அங்கு பிரிக்கப்படுவதையும் தெளிவாக கூறினார்
அதேப்போல் பாஸ்போர்ட் அலுவலகம் தலைமை தபால்நிலையங்களில் தற்போது செயல்படுவது பற்றி கூறினார்

No comments:
Post a Comment