Thursday, 5 September 2019


பட்டாம் பூச்சிகள் நாங்கள்
பள்ளி வாசல் நுழைந்ததும்
பட்டாம்பூச்சி கூட்டத்தில்
பட்டாம் பூச்சியாய சிறகடிக்கும்
வரம் பெற்றவர்கள் நாங்கள்….
 ஒளிபெற்று மின்னும் முகங்களில்
கவலை தோய்ந்த முகத்தை
பார்த்தவுடன் கண்டறியும்
விஞ்ஞானிகள் நாங்கள்
  அரும்புகள் மத்தியில்
பசியால் வாடியிருக்கும் அரும்பின்
பசிதீர்க்கும் தாய்மார்கள் நாங்கள்
அவசர ஆரவார உலகில்
இளமனதில் துள்ளி வினையாடும்
கற்பனைகளையும் கதைகளையும்
காது கொடுத்து கேட்கும்
குழந்தைகள் நாங்கள்
சிறுபிள்ளைகளின் செயல்களை
பகல் முழுவதும் கண்காணிக்கும்
மூடிய மின்சுற்று தொலைக்காட்சிகள்
நாங்கள் ……
பிஞ்சுக் கரத்தினை
இறுகப்பற்றி அகரம்
எழுதத் துவங்கும்
ஆசிரியர்கள் நாங்கள்
   இளம் மனதில்
தன்னம்பிகையும்
நேர்மறை எண்ணங்களையும்
விதைக்கும் உழவர்கள் நாங்கள்
      எவ்வாண்டும  இல்லாமல்
இவ்வாண்டி எமக்குரிய
தினமதில் ஆசிரியையாய்
ஆழ்மனதில் ஏதோ ஒரு ரணம்
கண்ணோரம் சில துளி கண்ணீர்
காற்றி வளைந்து நெளிந்து
சென்றாலும இனிய இசை
தரும் புல்லாங்குழல் போல
சமுகம் எள்ளி எள்ளி நகையாடினாலும்
அனைத்திற்கும் வளைந்து சென்று
சமூகத்திற்கு இனிய கனிகளை
கொடுக்க பாடுபடும்
விருட்சங்கள் நாங்கள்
அத்தனையும் மறந்து பட்டாம் பூச்சியளோடு பட்டாம் பூச்சிகளாய் நாங்கள் ----சகாய ஆண்டனி பிரியா

No comments:

Post a Comment