Monday, 11 February 2019

மாவட்ட செயற்குழுவில் -சிறை சென்ற செம்மல்களுக்கு பாராட்டு -விரைவில் மாவட்ட அளவில் விழா எடுப்பது என முடிவு செய்யப்பட்டது


மாவட்ட செயற்குழு (கிருஷ்ணகிரி மாவட்டம் ) 11.02.201

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் தானைத்தலைவர் கிருஷ்ணாஜி மாளிகையில் நடை பெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். அருன்பிரகாஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் போராட்ட நிகழ்வுகள் பற்றி கூறி கீழ்கண்ட தீர்மானங்களை முன்மொழிந்தார் அவை எகமனதாக ஏற்கப்பட்டன. முடிவில்  பொருளாளர் பி.ஆர்.ராமச்சந்திரன்  நன்றி தெரிவிததார்.
 *சிறை சென்ற நம் இயக்க செம்மல்களுக்கு மாவட்டகிளையின் சார்பாக அனைத்து வட்டாரங்களும் இனைத்து பாராட்டுவிழா நடத்துவது எனவும் அவர்களுக்கு உரிய குடும்ப பாதுகாப்பு நிதி வழங்குதெனவும் இச் செயற்குழு தீர்மாணிக்கப்படுகிறது.



* மாவட்ட கிளையின் சார்பாக பாராட்டுவிழா மார்ச் முதல் வாரத்தில் சிறப்பு பொதுக்குழுவும் இயக்க பொருப்பாளர்களுக்கு பாராட்டு, சிறை சென்ற இயக்க செம்மல்களுக்கு பாராட்டுவிழா என முப்பெரும் விழா நடத்துவதென இச்செயற்குழு முடிவாற்றுகிறது.




* 2019 டிசம்பர் மாதம் 6 ,7,.8 தேதிகளில் சென்னையில் உள்ள தி.ராயல்மெரிடியன் விடுதியில் உலக தமிழசிரியர் மாநடு நடைபெற உள்ளது அதில் கலந்து கொள்ள பேராளர் கடடணம் 10000 செலுத்த வேண்டும் எனவே ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 5 உறுப்பினர்கள் விலாசத்துடன் தொகையுடன் ஜீன் முப்பதுக்குள் மாவட்ட கிளையில்செலுத்த இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
 *தமிழக அரசு நமது கேரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியகளுக்கு போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ம பெற்று தற்காலிக பணி நீக்க ஆணை ரத்து செய்து அதே பள்ளியில் பணியமர்த்தி, ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் மாண்புமிகு துணை முதல்வர்க அவர்களையும் . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிர மாவட்ட செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது
 2019 ஜீலை பாங்காக் தாய்லாந்து இ.ஜ மாநாட்டில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் மாவட்ட செயலாலர் வழியில் மாநில அமைப்பை தொடர்பு கொண்டு செல்லாமென இச் செயற்குழு முடிவாற்றுகிறது
 அனைத்து வட்டாரங்களிலும் போராட்ட ஆய்வு பாராட்டுவிழா குறித்த சிறப்பு பொதுக்குழு கூட்டங்கள் நடத்த படவேண்டும என தீர்மானிக்கப்படுகிறது.
காவேரிப்பட்டிணம் 18.2.2019
 கிருஷ்ணகிரி             19.2.2019
வேப்பனப்பள்ளி        20.2.2019
பர்கூர்                             21.2.2019
கெலமங்கலம்,தளி   22.2.2019
சூளகிரி                          23.2.2019
ஓசூர்                                25.2.2019
மத்து◌ார்                     26.2.2019

ஜாமீன் எடுக்க உதவி அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

திங்கள் அன்று கைதாகி விடுவிக்கப்ட்டவர்களுக்கும் இச் செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

இயக்க உணர்வை போராட்டத்தில் காட்டிய  பெண் ஆசிரியர்களுக்கு இச் செயற்குழு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது





































வேப்பனப்பள்ளி கிளையின் சார்பாக அனைவருக்கும் பொன்னாடை போர்த்ப்பட்டது





No comments:

Post a Comment