Thursday, 28 February 2019

பிப்ரவரி -2019 மாத இயக்க நடவடிக்கைகள்





       
    பிப்ரவரி  -2019 மாத இயக்க நடவடிக்கைகள்  
       
  3.2.19 மாவட்ட ஜாக்டோ கூட்டம் -கூட்டத்தில் பங்கேற்று இந்த போராட்டத்தில் தொடக்கப்ப்பள்ளி ஆசிரியர்கள் பங்களிப்பே அதிகம் மற்றவர்கள் பங்கேற்பு இல்லை என கூறப்பட்டது.  
       
  3 அதே மூன்றாம் தேதி சஸ்பண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நிலைப்பற்றி உரியவர்களுடன் பேச்சு வார்த்தை கிருஷ்ணகிரி வட்டாரத்தின் சார்பாக  
       
  5 LKG  -UKG தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் சந்திப்பு - அவரவர் பணியாற்றிய இடங்களிலே பணியாற்ற வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு கூற கூறினோம்  
       
  7 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருடன் சந்திப்பு மாவட்ட செயலருடன்  
       
  8 LKG  -UKG ல் பணியமர்த்தப்பட்டவர்களை  பி,இ.ஒ வழக்கின் தடையாணைப்படி திரும்ப அழைக்கப்பட்டனர்  
       
  10 சஸ்பண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நிலைப்பற்றி உரியவர்களுடன் பேச்சு வார்த்தை கிருஷ்ணகிரி வட்டாரத்தின் சார்பாக  
       
  11 மாவட்ட செயலர்கள் கூட்டம் - மீண்டும் ஆசிரியர்கள் பணியில் சேர எடுக்கப்பட்ட நடவடிகை பற்றி கூறப்பட்டது  
       
  13 இயக்க தொடர் பணியால் மீண்டும் ஆசிரியர்கள் பணியில் சேர அரசு உத்தரவு  
       
  15 சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர ஆணை வழங்கப்பட்டது.  
       
  17 சஸ்பண்ட் நடவடிகை ரத்து செய்ய வேண்டி முக்கிய நபர்களிடம் வலியுறுத்தப்பட்டது.  
       
  18 சொசைட்டி மீட்டிங்  
       
  21 வட்டாரப் பொதுக்குழு கூட்டம் அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளி கிருஷ்ணகிரி  
       
  25 மாநிலத்தின் முக்கிய தலைவரிடம் சஸ்பண்ட ஆசிரியர்கள் மீதான நடவடிகை ரத்து செய்யசொல்லி கோரிக்கை  
       
       
    பிப்ரவரி  -2019 மாத இயக்க நடவடிக்கைகள்  
       








       
  இது மட்டுமல்லாது மாலை மாலைவேளைகளில் ஆசிரியர்களின் வருமான வரி சார்ந்த சரிபார்ப்புகள் மற்றும் அலுவலகப்பணிகள்  
       
       
 
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்             J.S.R - கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் பணிகள்   
       
       
  3 கிருஷ்ணகிரி நாட்டான்மைகொட்டாயில் நிலத்துக்கு அடியில் உள்ள நடுகல் ஆவணப்படுத்தப்பட்டது.  
       
  24 பாலகுறி மலையின் மீதுள்ள 2500 வருடங்களுக்கு முந்தய கல்திட்டைகள் ஆவணப்படுத்தப்பட்டது.  
       
       
  26 மாவட்ட ஆட்சியர் சந்திப்பு - மகளீர்தினத்தன்று மாணவிகளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஆழைத்துச் செல்லுதல் - மாவட்ட ஆட்சியரை மாணவிகள் சந்திக்க கடிதம் கொடுக்கப்பட்டது  
       
       
  27 மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலர் அவர்கள் சந்திப்பு  மகளீர்தினத்தன்று மாணவிகளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு ஆழைத்துச் செல்ல அனுமதி கோறுதல்   
       





Sunday, 24 February 2019














































தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின்  பொதுக்குழு கூட்டம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு வட்டார தலைவர் என்றி பவுல் ராஜ் அவர்கள் தலைமை ஏற்றார்.  முன்னிலை  அருன்பிரகாஷ்ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர்  . மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன்  மாவட்ட துனைத்தலைவி மரியசாந்தி   ஆகியோர் முன்நிலை வகித்தனர்.  தானைத்தலைவர் கிருஷ்ணாஜி அவர்கள்  அக்கால போராட்ட முறைகள் பற்றி கூறினார்.  மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அவர்கள் போராட்டம் பற்றியும் போராட்டத்தின் தன்மை பற்றியும்  காஷ்மீரில் உயிரிழந்த வீரர்களின் வீரம்பற்றியும்  எல்லை காக்கும் வீரர்களின் அர்பணிப்பு  அவர்களின் தியாகம் பற்றியும் கூறினார். 
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டன
*     ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர அனுமதி அளித்த நமது கல்விதுறை அமைச்சர் அவர்களுக்கும்  அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேப்போல் அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
*     ஆசிரியர்கள் பணியில் மீண்டும் சேர மாநில அமைப்பு எடுத்த தொடர் நிகழ்வுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
 *    மேநாள் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் சிறை சென்ற  ஆசிரிய பெருமக்களுக்கும்  பாராட்டு விழா மாவட்ட கிளை அமைப்பு எடுத்த முடிவின் படி ஒவ்வொருவரும் 500 ரூபாய் அளிக்க ஒப்புதல் பெறப்பட்டது.
* தானைத்தலைவர் கிருஷ்ணாஜி மாளிகையின் தொடர் பணிகளை மேற்கொள்ளவும் .  படிக்கட்டுவரை சிமிட் தளம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது.
* தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு வின் செயல் பாடுகளை தொடர்ந்து செய்யவும் அதற்கான நடவடிக்க்க்கும்  ஒப்புதல் பெறப்பட்டது.
*   ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு  மே 10 ஆம் தேதி அன்று பாரட்டுவிழா நடத்துவதற்கும் ஒப்புதல் பெறப்பட்டது.
*        மார்ச் 8  நடுநிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் 20 பேரும் அவர்களுடைய தாயும் , சேர்ந்து கிருஷ்ணகிரியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்நத இடங்களை  சுற்றிகாட்ட முடிவு செய்யப்பட்டது.
*       ஏப்ரல் மாதம் முதல் மாதத்தில் சர்வதேச மகளீர் தின கொண்டாப்படும் என்றும் அதற்கான குழு விரைவில் அறிவித்து அதற்கான பணியை அக்குழு மேற் கொள்ளும் எனவும்.

பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலை  அருகே  உயில் நீத்த இந்திய வீரர்களுக்கு  மலர் அஞ்சலியும் .  மெழுகுவர்த்தி எற்றியும் தங்களின் வருத்தத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொண்டனர்.

முடிவில் பொருளாளர் அனுராதா நன்றி கூறினார்
கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் டேவீஸ் , ரோஸ்லின்மேரி  , தவச்செல்வி . மற்றும்  துனை பொருப்பாளர்கள் இசபெல்லாராணி . அனிதா . பிரியதர்னி  மேநாள் மாவட்டதலைவர் ரங்கப்பன் , இரகுமான் . ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Thursday, 14 February 2019

ஒரு நல்ல முடிவின் தொடக்கம் -மீண்டும் பணியில் - சிறை சென்ற இயக்க செம்மல்கள்


சிறை சென்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இன்று 14.2.2019  மீண்டும் பணிக்கு சென்றனர் .



 தமிழக அரசின் உத்தரவுக்கு பிறகு மதிப்புக்கு உரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் நியமனஆணை பெற்ற நிகழ்வு
 



 

 



 
 
 மேனாள் மாவட்டசெயலரிடம் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு




மாவட்டகல்வி அலுவலர்களிடம் ஆணையை பெறும் சிறை சென்ற செம்மல்கள்


 















 
நம்மோடு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இன்று ஆணை பெற்றார்கள்