Tuesday, 30 July 2024

சென்னை டி.பி.ஐ முற்றுகைக்கு சென்ற போது நல்லிரவு 3.30 மணிக்கு கைது 29.07.24 கிருஷ்ணகிரி s.v.v திருமணமண்டபத்தில் அடைப்பு

நல்லிரவு 3 மணிக்கு எங்களை சுற்றி காவல் துறை இருப்பதை அறிந்தோம்
தலைமை காவலர் ஜீப்பில் வந்தவுடன் நீங்கள் கைது செய்யப்பட்டு உள்ளீர்கள் எனவே மண்டவத்துக்குள் செல்லுங்கள் என்றார் அந்த நல்லிரவிலும் 15 காவல்துறையினர் வந்துவிட்டனர்
கிருஷ்ணகிரியில் சென்னை DPI முற்றுகை போராட்டத்துக்கு செல்ல தயாராக இருந்த டிட்டோ - ஜாக் (தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி) கைது செய்யப்பட்டு S.V.V திருமண மண்டபத்தில் அடைப்பு https://youtu.be/0bCsFFKCSyY
கிருஷ்ணகிரியில் கைது நடவடிக்கை கைது நடவடிக்கையை மீறி சென்னை மறியல் போராட்டதில் கலந்துகொள்ள தயார் நிலையில் தம்பிகள் சென்னை முற்றுகையில் பொதுச் செயலருடன்
மாநிலதுணைத்தலைவர் சரவணனுடன்
நகர செயலர் திருப்பதி
நாங்கள் கிருஷ்ணகிரி சிறையில் - தம்பிகள் பாலாஜி , ராபட், ஜெயராஜ், ரவி ஆகியோர் கிருஷ்ணகிரி வட்டாரகிளை சார்பில் சென்னையில் கைது தற்காலிக சிறை
கிருஷ்ணகிரியில் சிறை வைக்கப்பட்டவர்களை பார்க்க வந்திருந்தவர்கள்
மாலை 5.50 மணிக்கு விடுவிக்கப்பட்டோம்
கைதிலும் ஒரு மகிழ்வான நிகழ்வு - டெய்சியின் பிறந்தநாள் கொண்டாட்டம் https://youtu.be/e6PYn86eSys

Saturday, 27 July 2024

25.07.2024 - சத்துணவு மற்றும் காலை உணவுத்திட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டி கோரிக்கை ஆர்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை

காலை உணவுத் திட்ட கண்காணிப்புப் பணியில் இருந்து விடுவிக்கக் கோரி ஆர்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக இன்று மாலை 5 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு காலை உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் இவற்றின் கண்காணிப்புப் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் ஹென்றி பவுல்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திரு. அருள் பிரகாஷ்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரும்பாலும் பெண் ஆசிரியர்களைக் கொண்டது தான் தொடக்கக் கல்வித் துறை. காலை வேளையில் பெண்களுக்கு இருக்கக்கூடிய அதிகமான வேலைகளை கருத்தில் கொள்ளாமல் காலை உணவுத் திட்டத்தை தினமும் கண்காணிக்கப் பணிக்கப்படுவதன் விளைவுதான் கல்குறுக்கி ஆசிரியையின் மரணம். பல சிறு விபத்துகள் வெளியே வரவில்லை . பொதுவாகவே காலை வேளையில் பெண்களுக்கு இருக்கும் அதிகப்படியான வேலைகளுடன் சேர்த்து இந்த காலை உணவு திட்டத்திற்காக முன்கூட்டியே செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் இது போன்ற நிகழ்வுகள் மேலும் நடக்கலாம். நெடுந்தொலைவு உள்ள பள்ளிக்கு செல்வார்கள் காலையில் ஆறு அல்லது ஏழு மணிக்கு செல்ல வேண்டி வரும் சில இடங்களில் பேருந்து சேவைகளை பொருத்தும் அந்த நேரம் மாறுபாடு இருக்கும். இந்த கூடுதல் வேலை பளு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திறனைக் கூட சில நேரம் பாதிக்கலாம். எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை கண்காணிக்க ஆணையில் குறிப்பிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கூடுதலாக பஞ்சாயத்து தலைவர் வார்டு உறுப்பினர், கவுன்சிலர், முன்னாள் இராணுவ வீரர்கள் ஆகியோரை பயன்படுத்தினால் . ஆசிரியர்கள் மீதான அழுத்தம் குறையும். அதுபோலவே, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவை பார்வையிடுவதால் அதை சரிப்படுத்துவதால் சில இடங்களில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, முதல்வரின் சிறந்த திட்டமான இந்த காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டம் இவற்றின் கண்காணிப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க இந்த கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த கூட்டத்தில் மரியசாந்தி, மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்,தமிழ்ச்செல்வன் , திருப்பதி,தோழமை சங்கத்தின் செயலர் இராவணன் பேசினர். முடிவில் வட்டார பொருளாளர் சாதிக் ஹுசைன் அவர்கள் நன்றி கூறினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை -வரவேற்பும் , கோஷமிடுதலும் காலை உணவுத் திட்ட கண்காணிப்புப் பணியில் இருந்து விடுவிக்கக் கோரி ஆர்பாட்டம்
https://youtu.be/tYxZbmd9WlE
சாதிக் உசேன்- வட்டார பொருளாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை - காலை உணவுத் திட்ட கண்காணிப்புப் பணியில் இருந்து விடுவிக்கக் கோரி ஆர்பாட்டம் https://youtu.be/CvZIWf9Tx90
பிரியதர்ஷினி - வட்டார துணைச்செயலர்.- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை - காலை உணவுத் திட்ட கண்காணிப்புப் பணியில் இருந்து விடுவிக்கக் கோரி ஆர்பாட்டம் . https://youtu.be/HV0o8Tpk1do
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை -- காலை உணவுத் திட்ட கண்காணிப்புப் பணியில் இருந்து விடுவிக்கக் கோரி ஆர்பாட்டம் தோழமைச்சங்கமான தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலர் திரு . மா. இராவணன் அவர்கள் சிறப்புரை https://youtu.be/MdmffnE2-zE
டெய்சி ராணி துணைச் செயலர் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை - காலை உணவுத் திட்ட கண்காணிப்புப் பணியில் இருந்து விடுவிக்கக் கோரி ஆர்பாட்டம் . https://youtu.be/6ERWHvk5pvk
நன்றி -நிம்மிக்கா & மீனா சத்துணவு & காலை உணவுத்திட்டத்திலிருந்து விடுவித்திடு - கோரிக்கை ஆர்பாட்டம் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை https://youtu.be/COjRfDlo3V4 https://youtu.be/XHR3IH68USo
அனைவருக்கும் வணக்கம் தனிப்பட்ட இருவரின் பிரச்சனையாக கருதாமல் தம்முடைய சொந்த பிரச்சனையாக கருதி தாமாகவே களத்திற்கு வந்து தங்களது ஆதரவை அளித்த - அத்துணை தமையன்களுக்கும், தமக்கைகளுக்கும் கோடான கோடி நன்றியை உரித்தாக்குகிறேன். தோழனாக தோழியாக ஒருவருக்கொருவர் இவ்வாறே தோள் கொடுப்பாராயின் நமக்கு தோல்விகளே இல்லை நம் கோரிக்கைகள் தோற்றுப் போவதுமில்லை. நம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கும் ஈடு இணையே இல்லை. -மீனா
போராட்டத் தளபதி உள்ள அண்ணன் கிருஷ்ணா ஜி மாவட்டத்தில் நடைபெற்ற எழுச்சிமிகு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது முன்னோர்கள் சத்துணவு திட்டத்திலிருந்து விடுவிக்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறை சென்று அதில் இருந்து மீண்டனர் ஆனால் தற்போது சத்துணவில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தி வரக்கூடிய அவல நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது இதைக்கண்டு கொந்தளிப்பு ஏற்பட்டு எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தியமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். ந, ரெங்கராஜன் இணை பொதுச் செயலாளர் அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் உலகத் தமிழாசிரியர் பேரவை https://way2.co/MTM3MDkxNDI=_lng2/3 https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/krishnagiri/2024/Jul/25/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-krishnagiri/-demonstration-for-the-release-of-teachers-overseeing-the-breakfast-program--/3685574 கூட்டணி மட்டும் 186 பேர் வருகை 12 பேர் உடல் நலமில்லை 3 பேர் ஊரில் இல்லை 7 பேர் தெரியவில்லை . பெருமை கொள்கிறேன் இந்த இயக்கம் வாழ்வதிலே இருப்பதெங்கள் வாழ்வாகும் ................
நாம் அரசுக்கு கோரிக்கை வைப்போம் காலை உணவுதிட்டத்திலிருந்தும் சத்துணவு மேற்பார்வை பணியில் இருந்தும் நம்மை விடுகிக்க - கிருஷ்ணகிரியில் 25.07.24 ல் கோரிக்கை ஆர்பாட்டம் கிருஷ்ணகிரி வட்டார/நகர தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சொந்தங்களே கலந்து கொள்வோம் https://youtu.be/1hBe1ez_fXU
சத்துணவு பணிகளில் ஆசிரியர்களை மீண்டும் திணிப்பதா? கற்பித்தல் பணியைத் தவிர்த்து பிற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தமிழகத்தின் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஒரே இடமாக அரசு பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக இக்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியைத் தவிர்த்து மற்ற பிற பணிகளை வழங்கி ஏழைக் குழந்தைகளின் கல்வியை கேள்விக்குறியாக்கும் பணிகளில் அரசும், அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். எமிஸ் வலைதள பதிவேற்றம் செய்யும் பணிகள் கற்பித்தலுக்கு இடையூறாக உள்ளது. அதிலிருந்து ஆசிரியர்களை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும் என்று போராடிவரும் நிலையில், 41 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சத்துணவு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபட நிர்பந்திக்கப்படுகின்றனர். தினம்தோறும் சத்துணவு குறித்த வலைதளத்தில் மாணவர்கள் வருகைப்பதிவு உள்ளிட்ட விபரங்களை பதிவேற்ற வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு யாரெல்லாம் பதிவேற்றம் செய்யவில்லை என்ற பட்டியலை குழுக்களில் வெளியிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகின்றனர். இந்த மன உளைச்சலுக்கிடையில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்வது முழுமையானதாக அமைவதில்லை. ஆசிரியர்களை சத்துணவு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக போராடி அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1982ல் விராலிமலையில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றி ஆசிரியர்களை சத்துணவு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து ஆசிரியர்கள் சத்துணவு பணிகளில் ஈடுபட்டு வந்ததால், 1983இல் சமயபுரம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆசிரியர்களை சத்துணவு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டுமென்ற பிரதான கோரிக்கையை உள்ளடக்கி, மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 6502 ஆசிரியர்கள் சிறை சென்றனர். இதன் காரணமாக ஆசிரியர்களை சத்துணவு பணிகளில் இருந்து விடுவிப்பதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சத்துணவு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. போராடிப் பெற்ற உரிமையை எளிதில் பறித்து விடலாம் என அரசு நினைக்கிறது. எமிஸ் வலைதள பதிவேற்ற பணிகளில் இருந்து ஆசிரியர்கள் முற்றிலுமாக விடுவிக்கப்படாத நிலையில், சத்துணவு பணிகள் பதிவேற்றம் செய்வதிலும் ஈடுபடுத்தப்படுவது வேதனைக்குரியது. அரசும், அரசு நிர்வாகமும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனை பற்றி கவலைப்படுகிறதா என்று ஐயம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் கற்பித்தல் பணியை தவிர்த்து பிற பணிகளை வழங்குவதில் அரசு ஆர்வம் காட்டக் கூடாது. முற்றிலுமாக பிற பணிகளில் இருந்து விடுவித்து ஆசிரியர்களை முழுமையான கற்பித்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். எதிர்கால இளம் தலைமுறையின் நலனை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் பொதுமக்களின், மாணவர்களின், ஆசிரியர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் பிறகாவது அரசு உணர்ந்து ஆசிரியர்களுக்கு பிற பணிகளை வழங்குவதை நிறுத்த வேண்டும். என்றும் கல்வி நலனில்.. ந.ரெங்கராஜன், இணைப் பொதுச்செயலாளர், AIPTF. பொதுச்செயலாளர், WTTC.