Sunday, 10 May 2026

10.05.2026 அரசு அருங்காட்சியகமும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து நடத்திய் -இயக்கபுரவலர் தானைத்தலைவர் கிருஷ்ணாஜி அவர்களின் பிறந்தநாள் நினைவு போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் -


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும் இணைந்து, புரவலர் திரு. கிருஷ்ணாஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே வரலாற்று ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘கிருஷ்ணகிரி வரலாறு’ குறித்த சிறப்புத் திறனறித் தேர்வை இன்று அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டது இத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளில் படிக்கும் 35 மாணவ மாணவிகள் பங்கேற்றார்கள்  அவர்களுக்கு  கிருஷ்ணகிரி வரலாறு குறித்த  கொள்குறி வகை வினாக்கள் (Multiple Choice Questions) கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது பின் விடைத்தாள் பெறப்பட்டு உடனே விடைத்தாள் திருத்தப்பட்டு அதில் சிறப்பாக தேர்வி எழுதி  முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களான யஸ்மிதா, நவனித் சாதனா ஆகியோர்க்கு   புரவலர் திரு. கிருஷ்ணாஜி அவர்களின் மனைவி சரோஜா பாய் அவர்கள் ரொக்கபரிசு  மற்றும் நினைவுப் கேடையம் வழங்கி சிறப்பித்தார்,  தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் ரங்கப்பன், ஜெயா ஆரோகியசாமி, திம்மராயன் டேவிஸ், மாதப்பம்,  பாலாஜி, டெய்சி, தமிழ்செல்வன், லசிமா, வினோதினி, கோவிந்தராஜி, பெனேஸ்வரன், சரவனக்குமார், திவித்குமார் கிரிஜா பாய், காப்பாட்சியர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்றார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் செய்திருந்தார்கள்.















































































































No comments:

Post a Comment