Tuesday, 23 September 2025

கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வட்டார கிளையின் சார்பாக இன்று மாலை 5 மணிக்கு வட்டார பொறுப்பாளர்கள் கூட்டம் கிருஷ்ணாஜி மாளிகையில் நடைபெற்றது. தலைவர் என்றி பவுல் தலைமையில் கூட்டம் கூடியது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் மரியசாந்தி, இசபெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச்செயலர் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது . செப்- 14 அன்று கிருஷ்ணகிரிக்கு வருகைதந்த முதல்வர் அவர்களுக்கு கிருஷ்ணகிரி வரலாற்றினை வெளிப்படுத்த எடுத்த சீரிய முயற்சிக்காக சந்தித்து அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக "வரலாற்றுக் கதிரவன்" பட்டமளிக்கும் நிகழ்வு முதல்வரின் பயணத்திட்டத்தில் ஏற்பட்ட சிறு மாற்றத்தால் தடைப்பட்டது. 1. வரலாற்றிலேயே இதுவரை இல்லா நிகழ்வாக ஒரு முதல்வர் அவர்களால் சட்டசபையில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து மயிலாடும் பாறை அகழ்வாய்வு முடிவை அறிவித்து இதுதான் முதல் முறை அதுவும் இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழகத்தில் இருந்து தான் தொடங்கும் என கூறியது (இரும்பின் பயன்பாடு 4200 வருடங்கள்) எம் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல வரலாற்று பெருமையும் கூட. 2. அதேபோல் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கண்டறிந்து மாண்புமிகு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் மூலம் பரிந்துரை வேண்டுகோள் செய்த சென்னானூர் அகழ்வாய்விடத்தை அகழ்வாய்வு செய்திட ஆணை வழங்கியதற்கு நன்றி. 3. சென்னானூர் அகழாய்வு முடிவு அதன் காலத்தை 10,475 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்துச் சென்றது தமிழக நிலப்பரப்பிலிருந்துதான் இந்திய வரலாறு தொடங்கப்படவேண்டும் என நீங்கள் (முதல்வர்) கூறியதை மீண்டும் எங்கள் மாவட்டம் உறுதி செய்துள்ளது. 4. எங்கள் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கண்டறிந்த ஏறுதழுவுதல், ஆநிரை மீட்டல் நடுகற்களை ஊர் பெயரோடு அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் மூன்றையும் வைத்து உலகம் அறியச்செய்தமைக்கு நன்றி. 5. சூழ்நிலை எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என தமிழகத்தின் தொன்மை வரலாற்றினை உலகறியச் செய்ய வேண்டி தாங்கள் எடுத்து வரும் சிறப்பான முயற்சிகள் உலகத் தமிழர்களின் நெஞ்சில் நாம் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி" என்பதை மெய்பிக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 6. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை ஆசிரியர்களுக்கு தொல்லியல் தொடர்பான பயிற்சி மற்றும் களப்பயணம், நடத்தி ஆசிரியர்களின் வரலாற்று அறிவை பெருக்கி அவர்கள் தொல்லியலின் மேம்பாடு மாணவர்களுக்கு கற்பிக்க வாய்ப்பாக அமைகிறது. இவற்றிர்க்கு எல்லாம் காரணம் தாங்கள் (தமிழக முதல்வர் ) எப்படி கதிரவன் ஒளிபட்டு உலகம் கண்ணுக்கு தெரிவது போல் எங்கள் மாவட்ட வரலாறு உம் கண் அசைவில் உலகம் அறிந்ததால் உமக்கு தமிழ்நாட்டின் "வரலாற்றுக் கதிரவன்" என்ற பட்டத்தை உமக்களித்து நாங்கள் அகமும் புறமும் மகிழ நீர் அனுமதியளித்து உதவ பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வரலாற்று ஆய்வுக்குழு சார்பாக சென்னை வர 20 பேர் ஆவலுடன் காத்திருக்கிறோம். இக்கடிதத்தை மதிப்பு மிகு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் வழியாக மாண்புமிகு முதல்வருக்கு அனுப்பி நேரம் ஒதுக்க கேட்டுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் பொருளர் சாதிக் உசேன் நன்றி கூறினார்

Friday, 19 September 2025

உச்ச நீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு வழங்கி உள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், கல்வி உரிமை சட்டம் 2009 Article 142 திருத்தம் செய்ய கோரியும். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டம் 2009 சட்டம் வருவதற்கு முன்பாக பணியில் சேர்த்த சுமார் 1,75,000 ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட நாங்கள் வழங்க உள்ள வேண்டுகோள் விண்ணப்பதினை மாண்புமிகு. பாரத பிரதமர் அவர்களுக்கு தங்களின் வாயிலாக அனுப்பி நிவாரணம் பெற்றுத் தர – இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 19.09.2025 அன்று கடிதம் கொடுக்க அகில இந்திய ஆசிரியர் கூட்டணி (AIPTF) முடிவு செய்துள்ளது. அதன் படி 19.09.25 வணிகவரித்துறை அமைச்சர் முன்னிலையில் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் ஆசிரியர் தகுதித்தேர்வு வழங்கி உள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும், கல்வி உரிமை சட்டம் 2009 Article 142 திருத்தம் செய்ய கோரியும். தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டம் 2009 சட்டம் வருவதற்கு முன்பாக பணியில் சேர்த்த சுமார் 1,75,000 ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட நாங்கள் வழங்க உள்ள வேண்டுகோள் விண்ணப்பதினை மாண்புமிகு. பாரத பிரதமர் அவர்களுக்கு தங்களின் வாயிலாக அனுப்பி நிவாரணம் பெற்றுத் தர – இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 19.09.2025 அன்று கடிதம் கொடுக்க அகில இந்திய ஆசிரியர் கூட்டணி (AIPTF) முடிவு செய்துள்ளது. அதன் படி 19.09.25 வணிகவரித்துறை அமைச்சர் முன்னிலையில் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.