Thursday, 14 November 2024

காட்டுபெருமாள் கோவில் - குழந்தைகள் தின விழா - உணர்வுகள் - மரம் நடும் நிகழ்வு 2024

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காட்டு பெருமாள் கோவிலில் இன்று குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் சாதிக் உசேன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள உணர்வுகள் குழு இந்த பள்ளிக்கு 21 மரக்கன்றுகளை எடுத்து வந்து 21 மாணவர்களை வைத்து நட வைத்தார்கள். இந்த மரம் நட்டு வைக்கும் நிகழ்வை ஊராட்சி ஒன்றிய தலைவி அம்சா ராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார் அதன் பின்பு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழக அரசினுடைய உத்தரவுப்படி இன்று பள்ளியில் மகிழ்முற்றம் குழுக்கள் தொடங்கப்பட்டன. சோக்காடி பஞ்சாயத்து தலைவர் கொடிலா ராமலிங்கம், வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் ,பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜேஸ்வரி, பள்ளியின் தற்காலிக ஆசிரியர் உதயா மற்றும் ஊர் மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் தமிழரசு அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment