Sunday, 9 July 2023

கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் 2023 நாள் 9.7.23

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கிருஷ்ணகிரி மாவட்டக்கிளை தேர்தல் முடிவுகள்.. பேரியக்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டக்கிளை தேர்தலானது - மாவட்டக்கிளை அலுவலகத்தில் இன்று (09.07.2023) மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேர்தல் ஆணையாளர் & மாநில துணைச் செயலாளர் திரு R. சரவணன் மற்றும் துணை ஆணையராக மாநில செயற்குழு உறுப்பினர் திரு. வினோத் அவர்களும் செயல்பட்டனர். மேலும், இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மேனாள் மாநிலத் தலைவர் திரு. சுதாகரன் அவர்களும், இயக்க கல்வியாளர் திரு. இமானுவேல் தாஸ் அவர்களும் மற்றும் வேலூர் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 👉இத்தேர்தலில், ஆறாவது முறையாக மீண்டும் மாவட்டச் செயலாளராக, அண்ணன் திரு. வெங்கடேசன் அவர்களும், 👉 மாவட்ட தலைவராக திரு. அருண்பிரகாஷ் ராஜ் அவர்களும், 👉மாவட்ட பொருளாளராக திரு. தனசேகரன் அவர்களும், மேலும், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் போட்டியின்றி, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.. -R. சரவணன், தேர்தல் ஆணையாளர் & மாநில துணைச் செயலாளர்

No comments:

Post a Comment