Sunday, 17 October 2021

 










மாநில செயற்குழு கூட்டம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (17.10.21) திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் எழில் தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரெங்கராஜன், முன்னாள் மாநிலத் தலைவர் சுதாகரன், முன்னாள் மாநில பொருளாளர் பெர்னபாஸ், மாநில துணை தலைவர்கள் கணேசன், வேலு, ராஜரத்தினம், அருமைகண்ணு, மாநிலத் துணைச் செயலாளர்கள் சரவணன், குருசாமி, கலைமுருகன், ஜூலியஸ், ராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நாகை மாவட்டச் செயலாளர் லட்சுமி நாராயணன், திருவாரூர் மாவட்ட செயலாளர் ஈவேரா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் குமார், தஞ்சை மாவட்ட செயலாளர் குழந்தைசாமி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சேட்டு, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஜோசப், சென்னை மாநகராட்சி மாவட்ட செயலாளர் விக்டர் ஜோஸ்வா, சென்னை மாவட்டம் ஜஸ்டின், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சிவன், சிவகங்கை மாவட்டச் செயலாளர் அன்பரசு பிரபாகரன், சேலம் ரவி, திருப்பூர் ஜெயராஜ், மதுரை மாவட்ட செயலாளர் செந்தட்டி காளை, திண்டுக்கல் (பொறுப்பு) மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும்  மாநில செயற்குழு உறுப்பினர்கள் அருள்ராஜ், ரங்கராஜன், பெலிக்ஸ், முருகேசன், வேலுமணி, கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், முனியாண்டி, எட்வின், ராஜாராம், சின்னதுரை, வினோத்குமார், கோபி, அர்ஜுனன், பார்த்திபன், தங்கராசு, செல்வ பிரின்ஸ், செல்வகுமார், செபாஸ்டியன், கவிதாதேவி, மாலதி, மெகராஜ்பானு, பத்மாவதி ஜெயலட்சுமி, தமிழ்ச்செல்வி ஆகிய 53 பேரும் சிறப்பு செயற்குழு உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 55 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி வசூல் செய்ததில் முறைகேடு செய்ததாக கூறி மாநில தலைவர் குணசேகரன், மாநில பொருளாளர் நீலகண்டன், ஈரோடு மாவட்ட செயலாளர் முத்துராமசாமி ஆகியோர் மூன்றாண்டுகளுக்கு அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் புதிய மாநிலத் தலைவராக நாகை மாவட்டச் செயலாளர் லட்சுமி நாராயணன், மாநில பொருளாளராக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் குமார் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தின் நிறைவில் பொதுச்செயலாளர் ரங்கராஜன் கூறியதாவது, திருவாரூரில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வசூல் செய்யப்பட்ட முதலமைச்சர் கொரோனா 

நிவாரண நிதியில் முறைகேடு செய்த மாநிலத் தலைவர் குணசேகரன், மாநில பொருளாளர் நீலகண்டன், ஈரோடு மாவட்ட செயலாளர் முத்து ராமசாமி ஆகிய

நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக புதிய மாநிலத் தலைவராக லட்சுமி நாராயணன் மாநில பொருளாளராக குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் கூறியதாவது, தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும்  ஆசிரியர்களுக்கு பள்ளி திறப்பதற்குள் கலந்தாய்வு மாறுதல் நடத்த வேண்டும். ஜீரோ காலியிடம் மூலம் பணி மாறுதல் செய்யப்படும் என்ற அச்சம் ஆசிரியர் இடத்தில் உள்ளது இந்த ஜீரோ காலிப்பணியிட மூலம் ஆசிரியர் பணி மாறுதல் செய்ய கூடாது என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு பொதுச் செயலாளர் ரெங்கராஜன் தெரிவித்தார்


No comments:

Post a Comment