Saturday, 14 March 2020

தேர்தல் -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஓய்வுப்பிரிவு தேர்தல்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் முடிவின்படி கிருஷ்ணகிரி மாவட்டகிளையின் தேர்தல் நடைபெற்றது
தேர்தல் மாநில அமைப்பு நியமித்த தேர்தல் ஆணையாளர்கள் பாலகிருஷ்ணன் , கந்தசாமி ஆகியோர் நடத்தினர். 

தேர்தலில் மாவட்ட தலைவராக ரங்கப்பன் அவர்களும் , செயலாளராக ஆரோக்யசாமி அவர்களும் பொருளாளராக திம்மராயன் அவர்களும் மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக அகமதுஉசேன் , ரங்கநாதன் , அமலோற்பவ மேரி ஆகியோரும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.






தேர்தல் ஆணையாளர் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்து உறுதிமொழி எற்க்கப்பட்டது. புதிய மாவட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி முன்னாள் மாநிலத்தலைவர் மாரியப்பன் . முன்னாள் மாநிலதுணைத்தலைவர் கிருஷ்ணாஜி , ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளையின் தலைவர் நாகலிங்கம் , அப்துல்ரகுமான்.  ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி வட்டத்தலைவர் என்றிபவுல், தமிழ்செல்வன் டேவீஸ் மதிவாணன் ஆகியோர் செய்திருந்தனர் .
முடிவில் பொருளாளர் திம்மராயன் அவர்கள் நன்றி கூறினார்

































No comments:

Post a Comment