Monday, 31 December 2018

கிருஷ்ணாஜி மாளிகை பத்திரம் திரு. எல் .இராமச்சந்திரன் இடம் இருந்து பெறுதல்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத்தின் கட்டிடமான கிருஷ்ணாஜி மாளிகையின் பத்திரம் 2018 சனவரி 9 ஆம் தேதி திரு.எல் .இராமச்சந்திரன் இடம் இருந்து பெறப்பட்டது.இதில் திரு.ரங்கப்பன். திம்மராயன். மதிவாணன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். அவர் உடல்நிலை கருதி அவர் இல்லத்திலேயே இந்த கூட்டம் நடைபெற்றது. சிக்கந்தர் பாஷா, ரோஸ்லின்மேரி,என்றிபவுல், டேவீஸ்,உசேன் ஆகியே◌ார் உடன் இருந்தனர்.
பத்திரம் ஒப்படைக்கப்பட்ட பின்தான் தன் மன பாரம் குறைந்ததாகவும் இனி இறப்பை நிம்மதியாக ஏற்பேன் என்றும் கூறியது நினைவுக்கு வருகிறது.10.09.1945 ல் பிறந்த இவர் கூட்டணி வட்டார தலைவராக இருந்தார். 28.12.2018 அன்று இயற்கை எய்தினார்






No comments:

Post a Comment