Monday, 17 November 2014

அகிலஇந்திய பொதுச்செயலர் மறைவு 20.10.2014

கடைசிப்படம் ….
எப்படி எல்லாம் போட்டி போட்டோம் 
உன் னோடு படம் எடுக்க -இன்று
கடைசியாக என்னோடு 
எடுத்துக் கொள்ளுங்கள் 
என படுத்துக் கொண்டாய்….
மீளா துயர் என்பது இதுதானோ
இருக்கும் வரை இயக்கி.
இறந்த பின்னும் இயக்கி
எமை விட்டு ஜே.எஸ்.ஆர் ரை
பார்க்க பயணித்து விட்டாயோ
உன் பயனம் சிறக்க வாழ்த்து வரவில்லை
கண்ணீர் தான் வருகிறது.
எங்கே சென்றாலும்
இந்த இயக்கம் வாழ்வதிலே
இருப்ப தெங்கள் வாழ்வாகும் என்று முழங்கிய -நீ
உன் வாழ்வை முடித்துக் ◌கொண்டாயோ…..
முன்னரே இதை தெரிந்த அன்னை
வானத்திலிருந்து மழையாய்
கண்ணீர் விட்டு ………….




 ஓய்ந்ததில்லை கடல் அலைகள் போல்
நீ எங்களுக்காக
நீ ஓயாமல் உழைத்தது
எங்களின் வருமானத்தை உயர்த்திது
அதுவே 
உன் ஆயுளை குறைத்தது
ஆம் நாங்களே காரணம்
உன் மரணத்துக்கு
ஓய்வு பெற்றபின் உனை
ஓய்வெடுக்க விட வில்லை
எல்லா இடத்துக்கும் அழைத்தோம்
அந்த வயதிலும் புன்னகையுடன்
அழைத்த இடமெல்லாம்
வருகை தந்தாய்
அப்போது தெரியவில்லை எமக்கு
எம் ஆயுளை கூட்டிய
உன் பேச்சு
உன் மூசசு -இப்படி
இப்போது கடலில் அலைகள் இல்லை




No comments:

Post a Comment