அந்த 18 நாட்கள் |
|
| 1972 இயக்கத்தின் வரலாற்று பங்கங்களில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்படவேண்டிய | |
| ஆண்டாகும் . | |
| ஆசிரியர்களின் இயக்க வரலாற்றில் முதன் முதலில் நமது இயக்க சிங்கங்கள் சிறை சென்றதும்ம. | |
| 1020 பேர் கைது செய்யப்பட்டு ரிமாண்டு செய்யப்பட்டதும் அப்போதுதான் . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி | |
| ஆசிரியர் கூட்டணியின் மாநில ,மாவட்ட ,கிளைப்பொறுப்பாளர்கள் தொண்டர்கள் ஆகியோர் | |
| 18 நாட்கள் சிறையில் இருந்ததும் அந்த ஆண்டுதான். | |
| பாரதப்போர் நடைபெற்றதும் 18 நாட்கள் தன் | |
| தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய குருசேத்திரப்போரும் 18 நாட்கள் தான். | |
| பழனிப் பொதுக்குழு முடிவுபடி மறியல் நடத்த முடிவு | |
| கல்வி எழுர்ச்சி நாள் கோரிகைகள் குறித்து கல்வி அமைச்சர் அவர்கள் வாக்குறுதி தந்தபடி | |
| அறிவிப்புகளை வெளியிடவில்லை எனில் மாநில செயற்குழு மறியல் ◌செய்ய வேண்டும் | |
| என்பது தீர்மாணம். | |
| 1. போராட்டத்தின் தொடக்கம் | |
| சிறப்பு மிக்க தீர்மாணம் | |
| பொதுச்செயலர் பொறுப்பில் இருந்த துணைச்செயலர் பொதுக்குழுவைக்கூட்டிணார். | |
| எப்ரல் 29ல் அமைச்சர் கோரிகைகளை ஏற்று அறிவிப்பு வெளியிடாவிட்டால் | |
| என்ன செய்வது . என்ற கேள்வி பவாதுக்குழுவில் வைக்கப்பட்டது. இதற்கு கோரிக்கைகளை | |
| பெற்றுத்தர செயற்குழு பொறுப்பேற்கும் என்ற பதில் தரப்பட்டது. அப்படி சொல்லக்கூடாது | |
| அறிகை வெளியிடப்பட வில்லை எனில் 30ம் தேதி மாநில செயற்குழு அமைச்சர் | |
| மறியல் செய்து சிறைசெல்ல தயாரா என்ற கேள்வி வைக்கப்பட்டது.இதை செயற்குழு உறுதி செய்தது | |
| அமைச்சர் வீட்டு முன் மறியல் நடத்தப்படும். பங்கு பெறாத மாநில செயற்குழு உறுப்பினர்கள் | |
| அடிப்படை உறுபபினர் பதவியை இழப்பர் என்ற சிறப்பு மிக்க தீர்மாணத்தை அறிவித்தது. | |
| போராட்டக்குழு மற்றும் அமைப்பாளராக தருமபுரி மாவட்ட செயலர் பெ.கந்தசாமி சிறப்பாக | |
| செயல்பட்டார் அவருக்கு துணையாக ஆண்டிப்பட்டி திரு இராமலிங்கம் , தென்னார்காடு மாவட்டத்தின் | |
| செல்லமுத்து இரா பானு,ம.க.முத்துசாமி ,சாமிநாதன் ஆகியோர் உடன் இணைந்து பணியாற்றினர் | |
| போராட்ட நிகழ்வுகள் சட்டமன்ற உறுப்பினர் அறை என் 5 ல் இருந்து மாஸ்டர் ,ஜே.எஸ்.ஆர் மற்றும் | |
| முக்கிய நிர்வாகிகள் செயல்பட்டனர். | |
| தகவல்கள் அனைத்தும் தந்தி முலம் 29.4.1972ல் கொடுக்கப்பட்டது. | |
| அந்த போராட்டத்தின் முதல்நாள் 30.4.1972 மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் | |
| 19 பேர் அன்றைய மாநில தலைவராக இருந்த பெரியவர் ஆரணி கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மறியலில் | |
| ஈடுபட 19 பேர் கிளம்பினர். | |
| ஏன் அந்த 19 பேர் என்றால் 1947ல் நடைபெற்ற வேலைநிருத்த போராட்டத்துக்கு மாஸ்டர் | |
| மங்களுருவில் இருந்து 19 பேருடன் சென்னை வந்ததை நினைவு கூறும் வகையில் 19பேர் கலந்து | |
| கொண்டார்கள். | |
| அமைச்சரின் வீட்டை அடைவதற்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டார்கள் . கவல் துறையினர் | |
| மேற்கொண்டு செல்ல வேண்டாம் என்று தடுக்க பொறுப்பாளர்கள் நாங்கள் செல்வோம் என்று | |
| முன்னேரி வலுவாக முன்னேரிச்செல்ல காவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தள்ளு முள்ளு | |
| ஏற்பட்டது. ஆசிரியர்கள் முழக்கங்களை வலுவாக எழுப்பி மேலும் முன்னேற முயன்ற போது | |
| சென்னை துனை கமிஷனர் ஆணைப்படி கைதுசெய்யப்பட்டனர் 19 பேரும். | |
| அன்றைய தினம் குடியரசுதலைவர் வி.வி.கிரி அவர்கள் சென்னை வந்திருந்தார் அவர் கிரீன் வேஸ் | |
| சாலை வழியாக செல்வதால் காவல் துறைக்கு ஏகப்பட்ட பாதுகாப்பு பணி இதற்கிடையில் | |
| ஆசிரியர்களை ஒரு வேணில் ஏற்றி பொதுச்செயலர் முத்துசாமியிடம் காவர் துறை கல்வி | |
| அமைச்சர் ஊரில் இல்லை திங்கள் அன்னறு வந்திடுவார் அன்று அமைச்சர் அவர்களை | |
| உங்களிடம் பேசிட ஏற்பாடு செய்கிறே◌ாம்இப்போது நீங்கள் சென்று விடுங்கள் என்று | |
| வேண்டினர். ஆனால் மாஸ்டர் அதை ஏற்கவில்லை பின் வேன் கமிஷனர் அலுவலகம் சென்றது | |
| மாலை 5 மணி கைது செய்யப்பட்ட அணைவரும் அழைக்கப்பட்டோம். | |
| கமிஷனர் முன் நிறுத்தப்பட்டோம். கமிஷனர் அமைச்சரை பார்க்க ஏற்பாடு செய்கிறேன் | |
| பிரச்சணையை பேசி தீர்த்துகொள்ளுங்கள். | |
| மாஸ்டர் உடனே நாங்கள் முன்பே அமைச்சரிடம் இதுபற்றி பேசிவிட்டோம் அமைச்சர்தான் | |
| தான் சொன்னபடி நடக்கவில்லை முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று | |
| கூறி சென்றவர் குறித்த நாளில் அறிவிப்பு வராததால் நாங்கள் பொதுக்குழுவின் முடிவுகள் | |
| படி நாங்கள் மறியல் செய்ய சென்றோம் என கூறினார். | |
| மாலையில் வீட்டுக்கு செல்வதை எவரும் விரும்பவில்லை ஏன் எனில் தீர்வு கிடைக்காது . | |
| முடிவில் கமிஷனர் 15 நாள் ரீமாண்டு செய்தார். | |
மத்திய சிறைச்சாலை - சென்னை சிறை |
|
| வேன் சென்னை மத்திய சிறைக்கு சென்றது அங்கு ஆசிரியர்களிடம் இருந்த வாட்ச் , மோதிரம், | |
| காயிதங்கள் , இதரப்பொருட்கள் , கடைசியில் அறைஞான் கயிறு அத்தனையும் பெற்றுகொண்டு | |
| உள்ளே சட்டை பணியன் ,டிராயர் ,வேட்டியுடன் அனுப்பினர். | |
| சிறைக்காவலர் அனைவரையும் 2 ஆவது குவாரன்டீனுக்கு அழைத்துச்சென்றார். | |
| அவைகள் அரசியல் கட்சியைச்செர்ந்தவர்களை அடைக்கப்பயன்பட்டது.கீழ் பகுதியில் நான்கும் மேலே நான்கும் | |
| ஆக எட்டு அறைளைகொண்டிடுந்தது. | |
| . | |
| ஆசிரியர்கள் நலனுக்காக முதன் முதலில் சிறைக்கு சென்றதை பெருமையாக கருதினர் | |
| ஆளுகொரு அலுமணியத்தட்டும அலுமணிய குவளையும் அளிக்கப்பட்டது. | |
| படுத்துகொள்ள ஆளுகொரு துணி விரிப்பு தந்தார்கள் . இரவு கோதுமைக்களி , சிறிது அரிசி சாதம் | |
| கொடுக்கப்பட்டது. அதன் பின் 2 மண்சட்டிகள் கொடுத்தார்கள் . ஒன்று குடிநீர் வைப்பதற்க்கும் | |
| ஒன்று இரவில் சீறுநீர் கழீப்பதர்க்கும். பின் அனைவரும் கம்பிகளுக்கு பின் அடைக்கப்பட்டனர் | |
| யாரும் கம்பியை எண்ணவில்லை . தம் கோரிகைகளையே எண்ணிபார்த்து உவகை அடைந்தனர் | |
Saturday, 13 April 2013
Subscribe to:
Comments (Atom)
