Friday, 21 December 2012

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் இழப்பு

தமிழ்நாடு தொடக்கப்ள்ளி ஆசிரியர் கூட்டணி

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் இழப்பு : தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட முடிவு

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ரூ.7,838 இழப்பு ஏற்படுகிறது. அது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் ஜன.,5ல் போராட்டம் நடத்தப்பட உள்ளது,'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருட்டினகிரி வட்டாரச் செயலர் தமிழ்செல்வன் கூறினார். அவர் கூறியதாவது:ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழக பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்கள் ஊதியத்தில் ரூ.7838 இழந்து வருகின்றனர்.இது எதிர்காலத்தில் மிகப்பெரிய இழப்பாக மாறும். மேலும், 1.6.88க்கு பின் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு தேர்வு, சிறப்பு நிலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டந்தோறும் ஜன., 5ல் தொடர் முழக்க போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment