Wednesday, 30 October 2024
தீபாவளி - கொண்டாட்டம் -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் -கிருஷ்ணகிரி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி
- சென்ற செயற்குழு கூட்டத்தில் வட்டார பொருளார் எஸ்.எச்.சாதிக்ஹுசைன் ஆசைப்பட்டு கொண்டு வந்த தீபாவளிக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு . 28.10.24 திங்கள் மாலை பொதுக்குழு கூட்டப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொதுக்குழு கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் கிருஷ்ணகிரி பழையபேட்டை நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வட்டார தலைவர் என்றி பவுல்ராஜ் தலைமை தாங்க வட்டார செயலர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார் நிகழ்வில் மூன்று முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன
1.2022 ஆம் ஆண்டு மாண்புமிகு கல்வி அமைச்சர் சட்ட பேரவையில் கல்வி மானிய கோரிக்கையில் ஆசிரியர்களின் தேவையற்ற நிர்வாக பணி சுமை குறைக்கப்படும் என்று அறிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நடைமுறை மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் தற்போது ஆசிரியர்கள் 50-க்கும் மேற்பட்ட பணிகளில் ஈடுபடுவதால் கற்றல் கற்பிப்பத்தலுகாண நேரம் குறைகிறது. எனவே ஆசிரியர்களின் தேவையற்ற பணிகளை குறைக்க வேண்டுகிறோம்.
2. சமீபத்தில் ஓய்வு பெற இருக்கும் ஒரு ஆசிரியர் மாணவரை அடித்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதும் . மாணவிகள் மேல் சிகரெட் பிடித்து புகை விட்ட மாணவனை கண்டித்த ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுத்ததும் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்வது வருங்கால சந்ததிகள் மோசமான நிலைக்கு செல்வதை ஊக்குவிக்கும் இதை கருத்தில் கொண்டு தகுந்த சட்ட திருத்தங்கள் கொண்டு வருவது வருங்காலத்தை நல்வழிப் படுத்தும்.
3. பெண் ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டப் கண்காணிப்பு பணியில் இருந்து ஆசிரியரை விடுவித்து உள்ளூரில் உள்ள கவுன்சிலர், வார்டு மெம்பர் ஆகியோரை பயன்படுத்த வேண்டுகிறோம்.
இதை மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களையும், மாண்புமிகு துணை முதல்வர் அவர்களையும் , மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களையும் இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
Subscribe to:
Comments (Atom)


















































