thiruvengadam
அனைவருக்கும் வணக்கம்.
அலுவலக இடமாற்றம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை மாலை அனைத்து இயக்க பொறுப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட , நடந்த விவாதங்களை உங்கள் முன் கூறுகிறோம். அன்றைய தினம் ஆசிரியர் மன்றம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஆசிரியர் முன்னேற்ற சங்கம், ஆகிய சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதலில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அலுவலகம் என்பது அனைவருக்கும் பொதுவானதே எனவே ஒவ்வொரு ஆசிரியரின் பங்கும் இருந்தால் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்தோம். அதன்படி ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்து தலா ரூபாய் 200 வீதம் பெற்றுக்கொள்ளலாம் என மூன்று சங்கங்களும் ஒத்துக்கொண்டனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டும் ஒத்துக்கொள்ளவில்லை . அவர்கள் சொன்ன வாதம் என்னவெனில் மொத்த செலவில் நான்கில் ஒரு பங்கை நாங்கள் தந்து விடுகிறோம். எனக் கூறினார்கள் உடனே மற்ற இயக்கப் பொறுப்பாளர்கள் அது சரியான செயல் இல்லை நாங்கள் குறைவான உறுப்பினர்களைக் கொண்டவர்களும் அதிக உறுப்பினர்களை கொண்டவர்களும் ஒரே தொகையை பிரித்துக் கொள்வதா என கேட்டோம் .ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் எவ்வளவு பேசியும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியாக மற்ற சங்கங்களின் பொறுப்பாளர்கள் ஒன்றைக் கூறினார்கள் அதாவது நீங்கள் உங்கள் உறுப்பினர்களிடம் வசூலிக்க கூடாது என கூறுகிறீர்கள் அப்படி எனில் உங்களுடைய மொத்த உறுப்பினர் எவ்வளவு உள்ளார்களோ அத்தனை ஆசிரியர்களுக்கும் 200 வீதம் செலுத்தி விடுங்கள் நாங்கள் மீதமுள்ளதை செய்கிறோம் எனக் கூறியும் அவர்கள் ஏற்கவில்லை. எல்லா விதத்திலும் நான் தான் என்ற நிலையில் பேசினார்கள் அங்கு இருந்த மற்ற பொறுப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களாக இருந்தாலும் கூட்டணியிலிருந்து கலந்துகொண்டவர்கள் அவர்களை அவமதிக்கும் விதத்தில் பேசுவது சரியா? இதற்கு முன் இவ்வாறு வசூல் செய்ய வில்லையா? திடீரென்று ஏன் இந்த மாற்றம் அல்லது ஏன் இந்த திடீர் ஞானோதயம்? இதுவரை நன்றாக ஒற்றுமையாக செயல்பட்ட நம்முடைய ஒன்றியத்தில் ஏன் இது போன்ற குழப்பங்களையும் மன உளைச்சல்களையும் உண்டாக்க வேண்டும்? இதுவே எங்களுடைய மற்ற மூன்று சங்கங்களின் மனவருத்தம். அதற்காகவே அந்த மற்ற மூன்று சங்கங்களும் சேர்ந்து இப்பணியை முடிக்கலாம் என தீர்மானித்தோம். இது தான் நேற்று நடந்தது. நன்றி.
sadik அனைவருக்கும் வணக்கம் 🙏🏻
அலுவலக இடமாற்றம் தொடர்பாக திங்கட்கிழமை மாலை அனைத்து இயக்க பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட, நடந்த விவாதங்களை உங்கள் முன் கூறுகிறோம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்ற சங்கங்கள் முன் வைத்த கோரிக்கைகளும் அதற்கு கிடைத்த பதில்களும்
🌷முதலில் நான்கு சங்கங்களில் இருந்தும் ஒரு பிரதிநிதியை நியமிப்பது, அவர்கள் ஒரு குழு அமைப்பது. அக்குழுவானது முறையாக welder,electrician,Mestry,
painter போன்றவர்களை நேரடியாக மாற்றப்படும் கட்டிடத்திற்கு அழைத்து அங்கு தேவைப்படும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய ஆகும் செலவினங்களை அவர்களை வைத்தே Estimated amount ஆகும் செலவை முறையாக அறிந்து கொள்ளுதல்.
(எவ்வளவு செலவு ஆகும் என்றே தெரியாமல் ஒரு நபருக்கு ரூ.200 என்று எப்படி வசூலிக்க முடியும்??? இந்தக் கேள்விக்கு கூட்டத்தில் ஒரு குரல் கூறிய பதில், நான் இவ்வாறு பல கட்டிடங்களை கண்டுவிட்டேன்,தனித்தனியாக ஒவ்வொருவரையும் கூட்டிக்கொண்டு சென்று கட்டிடத்தை காட்ட முடியுமா என்று)
sadik தயவு செய்து பொய் பேசுவதையும் பொய் வதந்திகளை பரப்புவதையும் தவிர்த்து விடவும்!
தூக்கிப்போட்றேன் எடுத்துக்கோ என்பதற்கும் இப்போவே கொடுக்கிறேன் என்பதற்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. இயக்கத்தின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக மற்றவர் என்மேல் யாரேனும் புகார் அளித்தால் அது உண்மையா என்று நேரடியாக என்னையே கேட்கவும். ஏனென்றால் உண்மை எனக்கும் என்மேல் புகார் அளித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்தது. பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை,என் தலையில் பாரமும் இல்லை.
🌷இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்து அவரவர்கள் கையில் இருக்கும் ஓர் தொகையினை போட்டு முதலில் தாமதமின்றி வேலையை ஆரம்பித்து விடலாம், பிறகு ஆன செலவை நான்கு சங்கங்களும் சமமாக பிரித்துக் கொள்ளலாம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அதற்கு இயக்கம் சார்பாக கொடுத்தால் தாமதமாகும் தடுமாற்றம் வரும் என்று கூட்டத்தில் ஒரு குரல் ஒலிக்க, அதற்கு நாம் தடுமாற்றம் எல்லாம் வராது வேண்டுமானால் எங்கள் பங்கை நான் இப்போதே கொடுத்து விடுகிறேன் என்று கூறினேன்.(அதைத்தான் நான் தூக்கிப் போடுகிறேன் என்று கூறியதாக அந்தக் குரல் திசைமாற்றியது)
🌷நம்மால் ஒருவருக்கு உதவி செய்ய இயலாவிட்டாலும் உபத்திரம் செய்து விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். காலம் நமக்கு ஏற்புடையதாக அல்ல, காலத்திற்கு ஏற்றற்போல் நம் செயல்களை மாற்றிக் கொண்டால் தான் எல்லோருக்கும் நல்லது. இன்றைய காலகட்டத்தில் அலுவலகத்திற்காக பணம் வசூலிப்பது என்பது சாதாரண விடயம் அல்ல ஒருவேளை யாரேனும் புகார் அளித்தால் அது யாருக்கு பாதிப்பு?? நம்மை நம்பியுள்ள அலுவலர்களை பாதுகாப்பது நமது கட்மையல்லவா?? ஆசிரியர்களை வைத்து தானே இயக்கம் நடத்துகிறோம் ?? ஆசிரியர்கள் வேறு இயக்கம் வேறா?? ஆசிரியர்களிடம் வசூல் செய்து கொடுப்பதற்கு பதிலாக இயக்கங்களே கொடுத்தால் என்ன?? நமது அலுவகத்திற்கு நாம் தான் முன்னின்று தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், அதற்கு ஆசிரியர்களிடம் வசூலிப்பது இக்கால சூழலில் தெவையற்ற விவாதங்கள் வரும் என்று கூறினோம்.
அதற்கு கூட்டத்தில் இருந்து ஒலித்த ஒரு குரல் கூறியது, இல்லை நாங்கள் முடிவு செய்து விட்டோம் தலைமையாசிரியர் வழியாக ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்தும் வசூலிப்பது தான் என்றார்கள், அதற்கு நான் வேறுவழியின்றி கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், நான் இந்த தீர்மானத்தில் கையெழுத்து இடமாட்டேன் என்றேன். (அதற்கு அந்தக் குரல், கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா என்றது சத்தியமாக நான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை )
🌷எங்கள் முடிவில் தீர்கமாக உள்ளோம் இயக்கம் வழியாகத்தான் கொடுப்போம் அதுதான் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாதது என்றோம். கூட்டத்தில் இருந்து ஒரு குரல் மீண்டும் ஒலித்தது, அப்படியானால் உங்கள் இயக்கத்தில் நீங்கள் அதிக உறுப்பினர்களை வைத்துள்ளீர்கள் எங்களிடம் குறைவாக உள்ளனர், உங்கள் இயக்க உறுப்பினர்கள் குறைவாக கொடுப்பார்கள், நாங்கள் அதிகமாக வசூல் செய்ய வேண்டுமா என்று, நாங்கள் தொடக்கம் முதலே கூறுவது குறைவாகவும் அல்ல அதிகமாகவும் அல்ல இதற்காக ஆசிரியர்களிடம் வசூலே செய்ய வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். சரிசமமாக அனைத்து இயக்கங்களும் பிரித்துக் கொள்ளலாம்
🌷மூன்று சங்கங்களும் செய்ய ஒத்துக்கொண்டனர் நீங்கள் ஒரு சங்கம் தான் செய்ய யோசனை செய்கிறீர்கள் என்றது கூட்டத்தில் ஒரு குரல், அதற்கு நான் விவாதத்தை திசை மாற்றாதீர்கள் நாங்கள் அலுவலகத்திற்கு செய்ய யோசனை செய்யவில்லை, ஆசிரியர்களிடம் வசூலித்து செய்ய தான் விருப்பமில்லை என்று கூறினேன்.
🌷ஓர் தனிநபர் முடிவு எடுத்துவிட்டு அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் இல்லையென்றால் நான் பேச்சை திசை மாற்றிக் கொண்டே இருப்பேன் என்பதில் எந்த விதத்தில் நியாயம். கருத்து சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு, கருத்தால் ஒன்றுபட்டால் உடன்படுகிறோம் இல்லையென்றால் தனித்து நிற்கிறோம் இதில் தவறேதும் இல்லையே??? யார் குழப்பவாதி?? ஒவ்வொரு முறையும் பேச்சை திசை மாற்றியவர்களா?? அல்லது ஆசிரியர் மற்றும் அலுவலக நலனை முன்னிலை படுத்திய நாங்களா??
🌷திடீர் ஞானோதயம் எல்லாம் இல்லை, ரூ.200 பெரிய தொகையும் அல்ல, இன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து எங்கோ சென்றுக் கொண்டிருக்கிறது. யாரெனும் ஒருவர் கருத்தால் வேறுபட்டு உங்கள் நிர்பந்தத்தினால் பணம் அளித்து பின்பு புகார் அளித்துவிட்டால் யார் பொறுப்பு ?? அந்தப்பழி இறுதியாக யார் மேல் சென்று விழும்?? நம்மை நம்பியுள்ள அலுவலர்களையும் நம் அலுவலகத்தையும் எந்தத் தீங்குமின்றி காப்பது நம் கடமையல்லவா?? காலத்திற்கு ஏற்றார்போல உத்திகளை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.
🌷எங்களுக்கு அனுபவம் போதவில்லை தான், திரித்து பேச. இன்றும் இயக்கம் தாண்டி நட்புணர்வுடன் தான் எல்லோரிடமும் பேசிக்கோண்டிருக்கிறோம்
beo
அலுவலகம் இடமாற்றம் செய்யும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.எனவே அது சார்பாக எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள கூடாது என அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. by BEOs Krishnagiri






















