மதிப்புமிகு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சந்திப்பு.
பள்ளிப்பார்வையிட வட்டார வளமைய கணக்கர்களையும், IED பயிற்றுனர்களையும், அவர்களின் இயல்பான பணியை தவிர்த்து மற்ற பணிகளுக்கு பயன் படுத்த வேண்டாம் (பள்ளிகளுக்கு மட்டும்) என கூறப்பட்டது. உடன் ஏற்றுக் கொண்டார். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை
அங்கன்வாடி மாறுதல் ரத்து செய்யப்பட வேண்டும்.
இன்று மாலை 5.00 மணிக்கு கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் செயற்குழு கூட்டம் . மாவட்ட துணைத்தலைவி தலைமையில் தானைத்தலைவர் கிருஷ்ணாஜி மாளிகையில் நடைபெற்றது.
அனைவரையும் செயலர் தி.தமிழ்ச் செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில தொடக்க பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பு மற்றும் அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துதல், சத்துணவு மையங்களை மூடுதல் ஆகிய நடவடிக்கைகளை எதிர்த்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் ஜாக்டோ ஜியோவின் சார்பில் *மாவட்ட தலைநகரங்களில் 18.1.19 அன்று மாலை 5. மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதில் இயக்க உறுப்பினர்கள் அனைவ்ரும் கலந்து கொள்ள செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தகவல் அளிக்க கூறப்பட்டது.
*.ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருகையில் அங்கன்வாடிக்கு பணிமாறுதல் வழங்குவதை தவிற்த்திருக்கலாம்
* இதுபோன்ற நிகழ்வுகளில் ஒன்றியத்தில் இளையவர்களைத் தான் இதுபோன்ற பணிமாறுதலுக்கு உட்படுத்துவார்கள் அதுவும் இதில் கடைபிடிக்கப்படவில்லை
* அங்கன் வாடிகளை மேம்படுத்துவது ஏற்புடையது தான் என்றாலும் அதற்கான வழி முறைகளை நெறிமுறைப் எற்படுததவேண்டும் வேண்டும்.
* இப்படி பணிமாறுதல் செய்யப்பட்டவர்கள் உபரிப்பணியிடம் என்றாலும் அடுத்த பணியிட மாறுதலில் இவகளின் இடம் வரையருக்ப்படவில்லை .அதற்கான எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை.
*. சரியான நெறிமுறைகள் வகுத்து அதை அனைத்து சங்கங்களுடனும் முறையன கூட்டம் நடத்தி செயல்படுத்த வேண்டும்
கூட்டத்தில் மாவட்டதுனைத்தலைவி மரியசாந்தி அவர்கள் ஆசிரியர்களின் வருங்கால நிலைபற்றி கூறினார்
மதிவாணன் அவர்கள் வருங்காலத்தில் ஆசிரியர்களின் நிலை பற்றி விரிவாக கூறினார்.
கூட்டத்தில் ரோஸ்லின்மேரி , மரியகப்ரேல் சுந்தரம், அறிவரசி,ஆன்ருமரியஜிலி, செந்தில்குமார்,நளினப்பிரியா, சுரேஷ், மலர்செல்வி, விஜயா,கஸ்து◌ாரி,ஜமுனா, தமிழரசி, கோமதி . பிரியதர்சனி,திலகவதி ஆகியோர் தங்கள் கருத்துக்களை கூறினர்
முடிவில் வட்டார பொருளாளர் அனுராதா நன்றி கூறினார்












