இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே என்னால் இயலாதுது என்று ஒரு நாளும் சொல்லாதே ஏன் எனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன் . இது விவேகானந்தரின் வீர மொழி இந்த வரிகளை படித்து கொண்டிடுந்த போது வேலுரில் இருந்நது ◌ெதொலைபேசி அழைப்பு அதில் சார் நான் ◌ெசொன்னதைப்பபற்றி என்ன முடிவு செஞ்சிங்க மீண்டும் விவேகானந்தரின் வீர◌ெமொழிகள் கண்முன் நின்றது - சரிசார் கண்தானத்தை தொடங்கிவிடுகிறோம் என்று கூறினேன்.முன்நிகழ்வின் விவரம் பிப்ரவரி 12ஆம தேதி இரவு என்னுடைய நண்பரை பலவருடங்களுக்கு பின் சந்தித்தேன். அவர் ஓர் தொண்டு நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார் இப்போது சொந்தமாக கடைவைத்துள்ளார். அவர் என்னிடம் நீங்கள் ஆசிரியர்கள் என்ன செய்கிறிர்கள் என்று கேட்டார் பாடம் நடத்துவோம் என்றேன். எப்படி என்றார் எனக்கு கோவம் வந்தது கரும்பலகையில் எழுதியும் புத்தகத்தைப்பார்த்தும் நடத்துவோம் என்றேன். அடுத்த கேள்விகேட்டார் அப்ப கண் இல்லாதவங்களுக்கு என்றார் நான் தினரிப்போனேன் அதற்க்கு தான் தனியாக பள்ளி இருகிறதே என்றபோது அவர கூறிய விவரங்கள் என் மனதைபாதித்தது 12 வயதுக்குள் லட்சக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆசிரியர்களாகிய நீங்கள் ஏன் கண்தானம் செய்து அதை தமிழகம் முழுதும் உள்ள ஆசிரியர்களிடத்தில் எடுத்துச்சொல்லக்கூடாது. என்று கூறிவிட்டு சென்று விட்டார் அதன் பின் தான் மேலுள்ள வரிகள்
அறக்கட்டளையின் அப்துர்ர ரகுமான் தலைவர் த.கிருஷ்னாஜி யிடம் கையெ◌ாப்பம் பெறுகிறார்.
அருகில் அவர்மனைவி பின்னால் மாவட்ட துனைத்தலைவர் திரு அருன்பிரகாஷ் நின்று கொண்டிருப்பவர் முன்னால் வட்டாரத்தலைவர் டி.எ.டேவீஸ்
பின்னால் நின்று இருப்பது நான் வட்டாரசெயலர்
அறக்கட்டளையின் அப்துர்ர ரகுமான் தலைவர் த.கிருஷ்னாஜி யிடம் கையெ◌ாப்பம் பெறுகிறார்.
அருகில் அவர்மனைவி பின்னால் மாவட்ட துனைத்தலைவர் திரு அருன்பிரகாஷ் நின்று கொண்டிருப்பவர் முன்னால் வட்டாரத்தலைவர் டி.எ.டேவீஸ்
பின்னால் நின்று இருப்பது நான் வட்டாரசெயலர்
| ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுபவை கண்கள். சில காரணங்களால்(பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சகணக்கானோர் பார்வையின்றி, உலகை காண முடியாமல் தவிக்கின்றனர். அவர்கள் நிச்சயம் மீண்டும் கண்பார்வை பெற முடியும்.என்ற ஏக்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.அவர்களிளல் இந்தியாவில் 60 லட்சம் குழந்தைகள் கார்வையற்று இருக்கிறார்கள் தமிழ்நாடு தெ◌ாடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (கிருட்டிணகிரி கிளை) இக்குறையை களைய தன்னால் இயன்ற சிறு உதவியை செய்ய முடிவெடுத்து அதன் அறக்கட்டளையான மாவீரன் ஜே.எஸ்.ஆர் - கிருஷ்னாஜி கல்வி அறக்கட்டளை மூலம் முதற்கட்டமாக 101 நபர்கள் கண் தானம் செய்வது எனவும் அது 9.3.2013 அன்று நநடைபெறும் சர்வதேச மகளீர்தின ◌ெகொண்டாட்டத்தின் போது அதற்கான பத்திரங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டு அதன் தொடக்கமாக இயக்கத்தின் முன்னால் மாநில துணைத்தலைவரும் இயக்ககசெம்மல் திரு.த.கிருஷ்ணாஜி முதல் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தார் | ||
| நாம் மறைந்த பிறகும் இவ்வுலகைக் காண வேண்டுமா.. கண்தானம் செய்யுங்கள். கண்தானம் செய்வது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தவும், கண்தானம் செய்பவர்களை பாராட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. | ||
| ஏன் கண்தானம் : நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல்.இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் “கார்னியா’ குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. | ||
| கார்னியா குறைபாடு: கண்ணின் முக்கிய உறுப்பாக விளங்கும் கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. விழித்திரையில் பிம்பம் படிவதில்லை. எனவே பார்வை தெரிவதில்லை. தொற்றுநோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாடு காரணமாக சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது. கார்னியாவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, அங்கே தானமாக கிடைத்த கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது. | ||
| ஒரு வயது குழந்தை முதல் வயது வித்தியாசமின்றி அனைவரும் கண்தானம் செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டிபி போன்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தாலும் கண்தானம் செய்யலாம்.தொற்றுநோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறிநாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருப்பின் அவர்களது கண்கள் தானமாக வழங்கமுடியாது. | ||
| கண்தானம் செய்ய விரும்புவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். ஒருவர் இறந்தவுடன் அவருடைய கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். இது கார்னியா குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை ஆப் செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டி பயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும். ஆறு மணி நேரத்துக்குள் கண்களை தானமளிக்க வேண்டும். | ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 ஆயிரத்து 500 கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இச்சிகிச்சையைப் பெற ஒன்பது லட்சம் பேர் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டுதோறும் இறப்பு எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தாலும் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை 30 ஆயிரமாகவே இருப்பது துரதிஷ்டவசமானது. |




